பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை U17 குழாத்தில் தமிழ்பேசும் வீரர்!

Bangladesh U17 Team Tour of Sri Lanka 2024

138
Bangladesh U17 Team Tour of Sri Lanka 2024 - Sri Lanka Squad announced - Tamil

பங்களாதேஷ் 17 வயதின் கீழ் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகளுக்கான இலங்கை 17 வயதின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை 17 வயதின் கீழ் அணியில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் சுழல் பந்துவீச்சாளர் விக்னேஷ்வரன் ஆகாஸ் இணைக்கப்பட்டுள்ளார். ஆகாஸ் மாகாண அணிகளுக்கு இடையிலான தொடரில் தம்புள்ள அணிக்காக விளையாடி பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்தார்.

>>தேசிய இளையோர் கிரிக்கெட் அணிகளில் யாழ். வீரர்கள் மூவர்<<

தமிழ்பேசும் வீரராக ஆகாஸ் இடத்தை பிடித்தக்கொண்டுள்ளதுடன், அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரியின் வீரர் கித்ம விதானபத்திரன மற்றும் உப தலைவராக சென். ஜோசப் கல்லூரியின் செனுஜ வெகுங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் 17 வயதின் கீழ் அணி மற்றும் இலங்கை 17 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 8ம் திகதி நிறைவடையவுள்ளது.

இலங்கை 17 வயதின் கீழ் குழாம்

ரெஹான் பீரிஸ், துல்சித் தர்ஷன, ஜனிந்து ரணசிங்க, செனுஜ வெகுங்கொட, கித்ம விதானபத்திரன, ஜேசன் பெர்னாண்டோ, ஜொசுவா செபஸ்தியன், செத்மிக செனவிரத்ன, சலன தினெத், ராஜித நவோதய, விக்னேஷ்வரன் ஆகாஸ், கெனுல பிலியங்க, ரெயான் கிரகொரி, ரசித் நிம்சார, ஒசந்த பமுதித்த

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<