ஐ.பி.எல். 2025 தொடருக்கான திகதிகள் அறிவிப்பு

IPL 2025

163
IPL 2025 to be played from March 14 to May 25

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது 2025ஆம் ஆண்டு இந்திய பிரிமீயர் லீக் ஐ.பி.எல். தொடருக்கான திகதிகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஐ.பி.எல். தொடரின் 2025ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 25ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றன.

>>விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக சுகத் திலகரட்;ன நியமனம்<<

அதேவேளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது 2026ஆம் மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். தொடர் நடைபெறும் திகதிகளையும் உறுதி செய்திருக்கின்றது. இதன்படி 2026ஆம் ஆண்டுக்கான தொடர்  அந்த ஆண்டின் மார்ச் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 31ஆம் திகதி வரையும், 2027ஆம் ஆண்டுக்கான தொடர் மார்ச் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 30ஆம் திகதி வரையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஐ.பி.எல். போட்டிகளின் திகதிகள் உறுதி செய்யப்பட்ட விடயம் தொடரில் பங்கெடுக்கும் 10 அணிகளுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் ஐ.பி.எல். தொடரின் மூன்று பருவங்களுக்கான திகதிகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விடயம், இறுதிய நேரத்தில் ஐ.பி.எல். அணி உரிமையாளர்களுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் இடையில் உருவாகும் நெருக்கடிகளை தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<