தற்காலிக பயிற்சியாளரினை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

Pakistan Cricket Team

54
Aaqib Javid

பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பயிற்சியாளராக வழிநடாத்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகீப் ஜாவேட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

அந்தவகையில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு 2025ஆம் ஆண்டின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரை ஆகீப் ஜாவேட் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக செயற்படவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

>>Prima U15 இளையோர் கிரிக்கெட் லீக் தொடர் இந்த வாரம் ஆரம்பம்<<

அதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வாளாராகவும் செயற்பட்டு வரும் ஆகீப் ஜாவேட் தற்போது பயிற்சியாளராக மாறியதன் மூலம் இரண்டு பொறுப்புக்களுடன் பாகிஸ்தான் அணிக்காக பணிபுரியவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடந்த ஓராண்டிற்குள் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படும் 5ஆவது நபர் ஆகீப் ஜாவேட் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) வெளியிட்ட ஊடக அறிக்கையில் புதிய நிரந்தர பயிற்சியாளர் ஒருவரை தெரிவு செய்யும் முறையான நடைமுறை ஒன்றினை சம்பியன்ஸ் கிண்ண நிறைவின் போது செய்து முடிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளதோடு, அது வரை ஆகீப் ஜாவேட்டிடம் அணியின் பொறுப்பு காணப்படும் எனக் குறிப்பிட்டிருக்கின்றது 

சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி தொடக்கம் மார்ச் 9ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெற தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், குறிப்பிட்ட தொடர் அங்கே நடைபெறுவதில் சந்தேகம் நிலவுகின்றது 

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்ட ஆகீப் ஜாவேட் பாகிஸ்தான் அணியுடன் ஆரம்பிக்கும் முதல் சுற்றுத் தொடராக ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் மற்றும் T20I போட்டிகள் அமைகின்றன 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<