தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தை பொருத்தவரை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தொடர்களிலிருந்து பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
>>மூன்றாவது போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு ; புதிய வீரர்களுக்கு வாய்ப்பு!<<
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சுழல் பந்துவீச்சில் அசத்தியிருந்த லசித் எம்புல்தெனிய மீண்டும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் ரமேஷ் மெண்டிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தனன்ஜய டி சில்வா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் முதன்மை விக்கெட் காப்பாளாராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன், சதீர சமரவிக்ரமவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருடன் துடுப்பாட்ட வீரராக ஓசத பெர்னாண்டோவும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
சுழல் பந்துவீச்சாளர்களாக லசித் எம்புல்தெனியவுடன் நியூசிலாந்து தொடரில் அறிமுகமாகிய நிசான் பீரிஸ் மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
வேகப்பந்துவீச்சாளர்களாக மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 27ம் திகதி டர்பன் – கிங்ஸ்மீட் மைதானத்தில் தொடரை ஆரம்பிக்கவுள்ளதுடன், இரண்டாவது போட்டி டிசம்பர் 5ம் திகதி ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
தனன்ஜய டி சில்வா (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, பிரபாத் ஜயசூரிய, நிசான் பீரிஸ், லசித் எம்புல்தெனிய, மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, கசுன் ராஜித
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<