இங்கிலாந்து அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் ஷிம்ரொன் ஹெட்மையர் இணைக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
>>லங்கா T10 சுபர் லீக் வீரர்கள் நிரல்படுத்தல் நவம்பரில்<<
குறித்த இந்த குழாத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டிகளில் கடைசியாக விளையாடிய ஷிம்ரொன் ஹெட்மையர் மீள அழைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய அணியிலிருந்து ஒரு மாற்றமாக இவருடைய மீள்வருகை மாறியுள்ளது.
அதேநேரம் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்ட அலிக் அதனேஷ் இங்கிலாந்து தொடருக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எவின் லிவிஸ் இலங்கை அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் காரணமாக அவர் தொடர்ந்து அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை புதன்கிழமை (01) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் குழாம்
ஷேய் ஹோப் (தலைவர்), ஷிம்ரொன் ஹெட்மையர், குடகேஷ் மோர்டி, ஜுவல் ஹென்ரூ, கேஷி கார்டி, ஷெமார் ஜோசப், அல்ஷாரி ஜோசப், சர்பேன் ரதபோர்ட், ஜெய்டன் சீல்ஸ், ரொஸ்டன் சேஸ், பிரெண்டன் கிங், ரொமாரியோ ஷெபர்ட், மெதிவ் போர்ட், எவின் லிவிஸ், ஹெய்டன் வோல்ஸ்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<