இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வில்லியம்சனை இழக்கும் நியூசிலாந்து

New Zealand tour of India 2024

70
Williamson

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நட்சத்திர துடுப்பாட்டவீரரான கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

>>புதிய பருவத்திற்கான IPL தொடரில் ஆடுவாரா MS டோனி?<<

இலங்கையுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் உபாதைக்கு முகம் கொடுத்த கேன் வில்லியம்சன் இந்திய சுற்றுப்பயணத்தில், நியூசிலாந்துஇந்திய அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது 

இந்த நிலையில் கேன் வில்லியம்சன் இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதை குணமான பின்னர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

கேன் வில்லியம்சனுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்ட விடயத்தினை நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கேரி ஸ்டேட் உறுதிப்படுத்தியிருப்பதோடு, அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

நியூசிலாந்துஇந்திய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை அடைந்திருக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (24) மும்பையில் ஆரம்பமாகுகின்றது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<