பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் மீண்டும் கைகோர்க்கும் முஸ்தாக் அஹ்மட்

69

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக பாகிஸ்தான் முன்னாள் சுழல் நட்சத்திரம் முஸ்தாக் அஹ்மட் மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>WATCH- “தரவரிசையில் முதல் மூன்று இடங்களுக்கு முன்னேறுவதே இலக்கு” – சரித் அசலங்க!

அதன்படி பங்களாதேஷ் அணிக்காக கடந்த T20 உலகக் கிண்ணத் தொடர் மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் சுற்றுப்பயணம் போன்றவற்றில் பணிபுரிந்த முஸ்தாக் அஹ்மட் பங்களாதேஷ் அணி தென்னாபிரிக்காவுடன் விளையாடவிருக்கும் டெஸ்ட் தொடரிலும் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக மீண்டும் செயற்படவிருக்கின்றார்.

அதேநேரம் கிடைத்திருக்கும் சில தகவல்கள் முஸ்தாக் அஹ்மட்டின் நியமனம் தற்காலிகமானது என்ற போதிலும் விடயங்கள் சிறப்பாக நடைபெறும் சந்தர்ப்பத்தில் அவர் பங்களாதேஷ் அணிக்கு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் முஸ்தாக்கின் அஹ்மட்டின் ஆளுகையில் காணப்பட்ட போது பாகிஸ்தானுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வரலாற்று வெற்றியினைப் பதிவு செய்தது. எனினும் அதன் பின்னர் இந்திய சுற்றுப்பயணத்தில் பங்களாதேஷ் வீரர்களுக்கு முஸ்தாக் அஹ்மட்டின் சேவைகள் கிடைத்திருக்கவில்லை. இந்த நிலையில் பங்களாதேஷ் இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடர்களில் மிக மோசமான தோல்விகளைச் சந்திந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக காணப்பட்ட சந்திக்க ஹதுருசிங்கவும் பதவி விலக்கப்பட்ட நிலையில் அவ்வணி தற்காலிக தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மோன்ஸ் மூலம் வழிநடாத்தப்படுவதும் சுட்டிக்காட்டத்தக்கது.

>>நுவனிது, ஹேமந்தவின் பிரகாசிப்புகள் வீண்; முதல் போட்டியில் இலங்கை தோல்வி!

அதேநேரம் பங்களாதேஷ் வீரர்கள் தென்னாபிரிக்காவுடன் ஆடும் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் (21) டாக்காவில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<