சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் தொடருக்கான 16 பேர் அடங்கிய இலங்கை ஒருநாள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>>அபுதாபி T10 லீக் தொடரில் மொத்தம் 21 இலங்கை வீரர்கள்<<
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியானது T20I தொடரின் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவிருக்கின்றது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை (20) கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் இலங்கை ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சரித் அசலன்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஒருநாள் குழாத்தில் இறுதியாக இந்திய ஒருநாள் தொடரில் பங்கேற்ற வீரர்கள் பெரும்பாலாக இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
அதன்படி இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை முன்னெடுக்கும் வீரர்களாக அணித்தலைவர் சரித் அசலன்கவுடன் குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் காணப்படுகின்றனர்.
அதேநேரம் இலங்கை அணிக்கு மேற்கிந்திய தீவுகள் தொடரில் மேலதிக துடுப்பாட்டப் பலமாக சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் பந்துவீச்சினை நோக்கும் போது அணியின் வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஸன மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் காணப்படுகின்றனர். மறுமுனையில் வேகப்பந்துவீச்சாளர்களான அசித பெர்னாண்டோ, டில்சான் மதுசங்க மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேற்கிந்திய தீவுகள் T20I தொடரினை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி<<
இலங்கை ஒருநாள் குழாம்
சரித் அசலன்க (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷ்க, துனித் வெல்லாலகே, வனிந்து ஹஸரங்க, ஜெப்ரி வன்டர்செய், மகீஷ் தீக்ஸன, ஜெப்ரி வன்டர்செய், சமிந்து விக்ரமசிங்க, அசித பெர்னாண்டோ, டில்சான் மதுசங்க, மொஹமட் சிராஸ்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<