சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20I தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை 73 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, தொடரினையும் 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.
>>சந்திக ஹதுருசிங்கவை பணிநீக்கம் செய்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
தம்புள்ளையில் இன்று (15) இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான T20I தொடரின் இரண்டாவது போட்டி ஆரம்பமாகியது. தொடர்ந்து இந்த தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றதன் காரணமாக தொடரினை தக்க வைக்க கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து இலங்கை வீரர்கள் களமிறங்கினர்.
இப்போட்டிக்கான இலங்கை அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. அந்தவகையில் நுவான் துஷார அணிக்குள் மீண்டும் அழைக்கப்பட, துனித் வெல்லாலகே T20I போட்டிகளில் அறிமுகம் பெற்றார்.
பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய இலங்கை அணி மெதுவான ஆரம்பத்துடன் ஓட்டங்கள் பெறத் தொடங்கியது. ஆரம்பத் வீரர்களில் ஒருவராக வந்த பெதும் நிஸ்ஸங்க பொறுப்பாக ஆடி தன்னுடைய 12ஆவது T20I அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்தார்.
அவரின் அரைச்சத உதவியோடு இலங்கை வீரர்கள் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் பெதும் நிஸ்ஸங்க ஒரு சிக்ஸர் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் எடுத்தார். குசல் பெரேரா 16 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார்.
அதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ரோமாரியோ செப்பார்ட் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, அல்சாரி ஜொசேப், ஷமார் ஜோசேப் மற்றும் ஷமார் ஸ்பிரிங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.
>>இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான்
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 163 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணியானது தொடக்கத்தில் இருந்து தடுமாறியதோடு 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற சரித் அசலன்க, மகீஷ் தீக்ஸன மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக பெதும் நிஸ்ஸங்க தெரிவாகினார்.
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி வியாழன் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | b Shamar Joseph | 54 | 49 | 9 | 1 | 110.20 |
Kusal Mendis | c Rovman Powell b Shamar Springer | 26 | 25 | 2 | 1 | 104.00 |
Kusal Perera | lbw b Shamar Joseph | 24 | 16 | 3 | 1 | 150.00 |
Kamindu Mendis | c Sherfane Rutherford b Romario Shepherd | 19 | 14 | 1 | 1 | 135.71 |
Charith Asalanka | b Sheldon Cottrell, | 9 | 7 | 2 | 0 | 128.57 |
Bhanuka Rajapakse | not out | 5 | 7 | 0 | 0 | 71.43 |
Wanindu Hasaranga | not out | 5 | 2 | 1 | 0 | 250.00 |
Extras | 20 (b 0 , lb 10 , nb 0, w 10, pen 0) |
Total | 162/5 (20 Overs, RR: 8.1) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Alzarri Joseph | 4 | 0 | 33 | 1 | 8.25 | |
Shamar Joseph | 3 | 0 | 35 | 1 | 11.67 | |
Gudakesh Motie | 4 | 0 | 13 | 0 | 3.25 | |
Romario Shepherd | 3 | 0 | 23 | 2 | 7.67 | |
Shamar Springer | 2 | 0 | 24 | 1 | 12.00 | |
Roston Chase | 4 | 0 | 24 | 0 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Brandon King | st Kusal Mendis b Dunith Wellalage | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Evin Lewis | lbw b Maheesh Theekshana | 7 | 13 | 1 | 0 | 53.85 |
Andre Fletcher | c Kamindu Mendis b Dunith Wellalage | 4 | 11 | 0 | 0 | 36.36 |
Roston Chase | c Kamindu Mendis b Dunith Wellalage | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Sherfane Rutherford | b Charith Asalanka | 14 | 16 | 2 | 0 | 87.50 |
Gudakesh Motie | b Charith Asalanka | 4 | 7 | 0 | 0 | 57.14 |
Rovman Powell | c Matheesha Pathirana b Kusal Mendis | 20 | 17 | 1 | 1 | 117.65 |
Romario Shepherd | lbw b Wanindu Hasaranga | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Shamar Springer | c Dunith Wellalage b Wanindu Hasaranga | 7 | 6 | 1 | 0 | 116.67 |
Alzarri Joseph | b Maheesh Theekshana | 16 | 10 | 1 | 1 | 160.00 |
Shamar Joseph | not out | 5 | 4 | 1 | 0 | 125.00 |
Extras | 6 (b 0 , lb 4 , nb 0, w 2, pen 0) |
Total | 89/10 (16.1 Overs, RR: 5.51) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Maheesh Theekshana | 3.1 | 0 | 7 | 2 | 2.26 | |
Nuwan Thushara | 1 | 0 | 9 | 0 | 9.00 | |
Dunith Wellalage | 4 | 0 | 9 | 3 | 2.25 | |
Charith Asalanka | 2 | 0 | 6 | 2 | 3.00 | |
Kamindu Mendis | 1 | 0 | 10 | 0 | 10.00 | |
Wanindu Hasaranga | 3 | 0 | 32 | 2 | 10.67 | |
Matheesha Pathirana | 2 | 0 | 12 | 1 | 6.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<