சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியானது இங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடுகின்றது. இதில் முதலாவதாக T20I தொடர் நடைபெறும் நிலையில், T20I தொடரின் முதல் போட்டி இன்று (13) தம்புள்ளையில் ஆரம்பமாகியது.
>> இமாலய ஓட்டங்களுடன் வெற்றியினைப் பதிவு செய்த இந்திய T20 அணி
பின்னர் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் இலங்கையை துடுப்பாடப் பணித்ததோடு, முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும் கமிந்து மெண்டிஸ் மற்றும் சரித் அசலன்க ஆகியோர் பொறுப்பாக ஆடினர்.
தொடர்ந்து இரண்டு வீரர்களும் அரைச்சதம் பெற இலங்கை அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்கள் பெற்றது. இலங்கை அணியின் சார்பில் அதன் தலைவர் சரித் அசலன்க 35 பந்துகளில் 9 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் கமிந்து மெண்டிஸ் 40 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளோடு 51 ஓட்டங்கள் எடுத்தார்.
மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சில் ரொமாரியோ ஷெர்பேர்ட் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தார். பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஈவின் லூயிஸ் மற்றும் பிரண்டன் கிங் ஆகியோரது ஆட்டத்தோடு சிறந்த ஆரம்பம் பெற்றது.
>> மொஹமட் சமியினை இழக்கும் இந்திய கிரிக்கெட் அணி
இந்த வீரர்கள் இருவரினது விக்கெட்டுக்களை இலங்கை வீரர்கள் கைப்பற்றிய பின்னர் மேற்கிந்திய தீவுகள் சிறு தடுமாற்றம் ஒன்றை காட்டிய போதிலும் அவ்வணி வீரர்கள் இறுதியில் போட்டியின் வெற்றி இலக்கை 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களுடன் அடைந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் தரப்பின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த பிரண்டன் கிங் 33 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 63 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் ஈவின் லூயிஸ் 28 பந்துகளுக்கு 5 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மதீஷ பதிரண 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மகீஷ் தீக்ஸன, வனிந்து ஹஸரங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரண்டன் கிங் தெரிவானார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Shai Hope b Romario Shepherd | 11 | 10 | 2 | 0 | 110.00 |
Kusal Mendis | b Gudakesh Motie | 19 | 16 | 1 | 1 | 118.75 |
Kusal Perera | b Shamar Joseph | 6 | 3 | 1 | 0 | 200.00 |
Kamindu Mendis | c Roston Chase b Shamar Springer | 51 | 40 | 5 | 2 | 127.50 |
Charith Asalanka | c Evin Lewis b Alzarri Joseph | 59 | 35 | 9 | 0 | 168.57 |
Bhanuka Rajapakse | c Gudakesh Motie b Romario Shepherd | 17 | 11 | 1 | 1 | 154.55 |
Wanindu Hasaranga | run out (Shai Hope) | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Chamindu Wickramasinghe | not out | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Maheesh Theekshana | not out | 4 | 1 | 1 | 0 | 400.00 |
Extras | 7 (b 0 , lb 3 , nb 0, w 4, pen 0) |
Total | 179/7 (20 Overs, RR: 8.95) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Alzarri Joseph | 4 | 0 | 40 | 1 | 10.00 | |
Shamar Joseph | 4 | 0 | 27 | 1 | 6.75 | |
Romario Shepherd | 4 | 0 | 39 | 2 | 9.75 | |
Roston Chase | 4 | 0 | 29 | 0 | 7.25 | |
Gudakesh Motie | 2 | 0 | 16 | 1 | 8.00 | |
Shamar Springer | 2 | 0 | 25 | 1 | 12.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Brandon King | c Kusal Perera b Kamindu Mendis | 63 | 33 | 11 | 1 | 190.91 |
Evin Lewis | c Chamindu Wickramasinghe b Matheesha Pathirana | 50 | 28 | 5 | 4 | 178.57 |
Shai Hope | c & b Wanindu Hasaranga | 7 | 6 | 1 | 0 | 116.67 |
Roston Chase | c Kusal Mendis b Matheesha Pathirana | 19 | 16 | 1 | 0 | 118.75 |
Rovman Powell | c Wanindu Hasaranga b Maheesh Theekshana | 13 | 18 | 1 | 0 | 72.22 |
Sherfane Rutherford | not out | 14 | 12 | 1 | 0 | 116.67 |
Romario Shepherd | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 13 (b 0 , lb 6 , nb 0, w 7, pen 0) |
Total | 180/5 (19.1 Overs, RR: 9.39) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chamindu Wickramasinghe | 2 | 0 | 27 | 0 | 13.50 | |
Asitha Fernando | 4 | 0 | 37 | 0 | 9.25 | |
Maheesh Theekshana | 4 | 0 | 31 | 1 | 7.75 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 38 | 1 | 9.50 | |
Matheesha Pathirana | 3.1 | 0 | 27 | 2 | 8.71 | |
Kamindu Mendis | 2 | 0 | 14 | 1 | 7.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<