இமாலய ஓட்டங்களுடன் வெற்றியினைப் பதிவு செய்த இந்திய T20 அணி

71
Bangladesh tour of India 2024

சுற்றுலா பங்களாதேஷ் – இந்திய அணிகள் நடைபெற்று முடிந்திருக்கும் மூன்றாவதும் இறுதியுமான T20I போட்டியில் இந்தியா 133 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் பங்களாதேஷ் 3-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

>> WATCH – “T20I போட்டிகளின் மோசமான பிரகாசிப்புகளிலிருந்து மீள வேண்டும்” – அசலங்க!

ஹைதரபாதில் நேற்று (12) இந்திய – பங்களாதேஷ் அணிகள் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு 20 ஓவர்கள் நிறைவில் சஞ்சு சாம்ஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரது அதிரடியில் 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 297 ஓட்டங்கள் எடுத்தனர். இந்தியா இந்த போட்டியில் பெற்ற 297 ஓட்டங்கள் வாயிலாக T20I போட்டிகளில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியொன்று பெற்ற கூடுதல் ஓட்டங்களுடன் சாதனையினைப் பதிவு செய்தனர்.

இந்திய துடுப்பாட்டம் சார்பாக சஞ்சு சாம்ஷன் தன்னுடைய கன்னி T20I சதத்தோடு 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 35 பந்துகளில் 75 ஓட்டங்கள் எடுத்தார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் தன்சிம் ஹஸன் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, முஸ்தபிசுர் ரஹ்மான், மஹ்மதுல்லா மற்றும் தஸ்கின் அஹ்மட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.

>> முதல் T20I போட்டிக்கான இலங்கை பதினொருவர் அறிவிப்பு!

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 165 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் வீரர்கள் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவினர்.

பங்களாதேஷ் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தவ்ஹித் ரிதோய் 42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டுக்களைச் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 297/6 (20) சஞ்சு சாம்ஷன் 111, சூர்யகுமார் யாதவ் 75, ஹார்திக் பாண்டியா 47, தன்சிம் ஹஸன் 66/3

 

பங்களாதேஷ் – 164/7 (20) தவ்ஹித் ரிதோய் 63, ரவி பிஸ்னோய் 30/3

 

முடிவு – இந்தியா 133 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<