இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நியூசிலாந்து டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் முதல் டெஸ்டில் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
T20I கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த மஹ்மதுல்லாஹ்
இந்தியா செல்லும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. இந்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த குழாத்தில் இணைக்கப்பட்ட முன்னணி துடுப்பாட்டவீரரான கேன் வில்லியம்சன் அவருக்கு ஏற்பட்ட தொடைப் பிரச்சினை (Groin Strain) காரணமாகவே தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் கேன் வில்லியம்சனின் பிரதியீடாக இதுவரை டெஸ்ட் அறிமுகம் பெறாத சகலதுறைவீரரான மார்க் சாப்மன் நியூசிலாந்து அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றார். மார்க் சாப்மன் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் 41.9 என்கிற துடுப்பாட்ட சராசரியினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மைக்கல் பிரஸ்வல் இந்திய சுற்றுப்பயணத்தில் முதல் போட்டிக்கான அணியில் மாத்திரம் இணைக்கப்பட்டிருப்பதோடு, இரண்டாம் மற்றும் மூன்றாம் டெஸ்ட் போட்டிகளில் அவரது குழந்தையின் பிறப்பு காரணமாக ஆடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கல் பிரஸ்வலினை இரண்டாம், மூன்றாம் டெஸ்ட் போட்டிகளில் இஸ் சோதி பிரதியீடு செய்கின்றார்.
இந்திய சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்து ஆடும் முதல் டெஸ்ட் போட்டி ஒக்டோபர் 16ஆம் திகதி பெங்களூரில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து குழாம்
டொம் லேதம் (தலைவர்), டொம் பிளன்டல், மைக்கல் பிரஸ்வெல் (முதல் டெஸ்ட்), மார்க் சாப்மன், டெவோன் கொன்வேய், மேட் ஹென்ரி, டேரைல் மிச்சல், வில் ஒரூர்க்கே, அஜாஸ் பட்டேல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிச்சல் சான்ட்னர், பென் சோர்ஸ், இஸ் சோதி (இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்), டிம் சௌத்தி, கேன் வில்லியம்சன், வில் யங்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<