புதிய BPL பருவத்தில் விளையாடவிருக்கும் அஞ்செலொ மெதிவ்ஸ்

Bangladesh Premier League 2024

96

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரின் புதிய பருவத்தில் சிட்டகொங் கிங்ஸ் அணிக்கு ஆட இலங்கையின் முன்னணி சகலதுறைவீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இரு சுழல் வீரர்களை விடுவித்துள்ள பாகிஸ்தான் டெஸ்ட் குழாம்

BPL T20 தொடரின் 11ஆவது பருவகாலத்திற்கான போட்டிகள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தொடரில் இம்முறை புதிய பெயருடன் ஆடும் அணிகளில் ஒன்றான சிட்டகொங்ஸ் அணிக்காகவே அஞ்செலோ மெதிவ்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் 

BPL தொடரில் முன்னதாக கொமில்லா விக்டோரியன்ஸ் அணிக்காக அனுபவம் கொண்டிருக்கும் அஞ்செலோ மெதிவ்ஸ், இறுதியாக நடைபெற்று முடிந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் கண்டி பல்கோன்ஸ் அணிக்காக ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

இதேநேரம் அஞ்செலோ மெதிவ்ஸின் சிட்டகொங் கிங்ஸ் அணி மெதிவ்ஸ் தவிர தமது அணியில் வெளிநாட்டு வீரர்களான இங்கிலாந்தின் மொயின் அலி, உஸ்மான் கான் மற்றும் ஹைதர் அலி ஆகியோரினை இணைத்திருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<