இரண்டு ஆண்டுக்கான ஒப்பந்தத்தை பெறும் மே.தீவுகள் வீரர்கள்!

West Indies Cricket

85
West Indies Cricket

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடமிருந்து ஷேய் ஹோப் மற்றும் ஷெமார் ஜோசப் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை, 15 வீரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

>>ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை<<

குறித்த இந்த 15 வீரர்களிலிருந்து 6 வீரர்கள் இரண்டு வருடங்களுக்கான தேசிய ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி ஷேய் ஹோப், அல்ஷாரி ஜோசப், ஷெமார் ஜோசப், பிரெண்டன் கிங், குடகேஷ் மோட்டி மற்றும் ஜெய்டன் சீல்ஸ் போன்ற வீரர்கள் 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர்.

இவர்களை தவிர்த்து அலைக் அதனைஷ், கிரைக் பிராத்வைட், கேசி கார்டி, ரொஸ்டன் சேஸ், ஜொசுவா டி சில்வா, கவெம் ஹொட்ஜ், ஆகில் ஹொசைன், ரொமாரியோ ஷெபர்ட் மற்றும் ரோவ்மன் பவெல் ஆகியோருக்கு ஒரு ஆண்டுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த ஒப்பந்தத்தில் நிக்கோலஸ் பூரன் மற்றும் சிம்ரன் ஹெட்மையர் போன்ற வீரர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் ஒரு ஆண்டுக்கான ஒப்பந்தம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் திகதி நிறைவடையவுள்ளதுடன், இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் 2026ம் ஆண்டு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<