இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இந்த ஆண்டுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும் தேசிய சுப்பர் லீக் (NSL) ஒருநாள் தொடரின் அனைத்து குழுநிலைப் போட்டிகளும் இன்று (02) நிறைவுக்கு வந்தன.
>>புதிய டெஸ்ட் தலைவரைப் பெறும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி
கோல் எதிர் கொழும்பு
காலி, கொழும்பு அணிகள் மோதிய இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் தடுமாறிய இந்தப் போட்டியில் கொழும்பு வீரர்கள் தமது சிறந்த பந்துவீச்சு காரணமாக 64 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்தனர். கொழும்பு அணியின் வெற்றியினை உறுதி செய்த இளம் இடதுகை சுழல்பந்துவீச்சாளரான திலும் சுதீர 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
கொழும்பு – 171 (40) விஷாத் ரன்திக்க 36, நுவனிது பெர்னாண்டோ 35, முதித லக்ஷான் 19/4
கோல் – 102 (27.2) ரமேஷ் மெண்டிஸ் 45, திலும் சுதீர 25/3
முடிவு – கொழும்பு 64 ஓட்டங்களால் வெற்றி
ஜப்னா எதிர் தம்புள்ளை
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஜப்னா, தம்புள்ளை அணிகள் இடையிலான போட்டியில் வனிந்து ஹஸரங்கவின் சகலதுறை ஆட்டம் காரணமாக தம்புள்ளை அணியானது தொடரில் தம்முடைய இரண்டாவது வெற்றியினை 16 ஓட்டங்களால் (டக்வத் லூயிஸ் முறையில்) பதிவு செய்தது.
>>இலங்கை – மே.தீவுகள் தொடருக்கான டிக்கெட் விலைகள் வெளியானது!
தம்புள்ளை அணியின் வெற்றியினை உறுதி செய்த வனிந்து ஹஸரங்க அதிரடியான துடுப்பாட்டத்தோடு வெறும் 35 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் பெற்றதோடு, பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். அத்துடன் கசுன் ராஜிதவும் தம்புள்ளை அணியின் வெற்றிக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி பங்களிப்பு வழங்கினார். மறுமுனையில் ஜப்னா அணியின் பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதிலும் அது வீணாகியது.
ஜப்னா – 234/9 (46) ஹாசித பொயகொட 65, லஹிரு மதுசங்க 51, கசுன் ராஜித 53/4, வனிந்து ஹஸரங்க 25/2
தம்புள்ளை – 230/8 (42) வனிந்து ஹஸரங்க 62, விஜயகாந்த் வியாஸ்காந்த் 58/3
முடிவு – தம்புள்ளை 16 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூயிஸ் முறையில்)
தேசிய சுப்பர் லீக் ஒருநாள் தொடரின் குழுநிலை மோதல்களின் அடிப்படையில் 8 போட்டிகளில் மொத்தமாக 7 வெற்றிகளைப் பதிவு செய்த கொழும்பு அணியும், 8 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்ற ஜப்னா அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றன. தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (06) தம்புள்ளையில் நடைபெறவிருக்கின்றது.