இலங்கை – மே.தீவுகள் தொடருக்கான டிக்கெட் விலைகள் வெளியானது!

West Indies tour of Sri Lanka 2024

115
West Indies tour of Sri Lanka 2024

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான டிக்கெட் விலைகளை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான T20I தொடர் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஒருநாள் தொடர் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் இருதரப்பு தொடர் அட்டவணை வெளியீடு<<

ரசிகர்கள் இந்த தொடருக்கான டிக்கெட்டுகளை அடுத்த மாதம் 6ம் திகதி முதல் இலங்கை கிரிக்கெட் சபையின் www.srilankacricket.lk/ இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும்.

T20I தொடருக்கான டிக்கெட்டுகளை ஒக்டோபர் 10ம் திகதி முதல் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கொழும்பு வித்தியா மாவத்தையில் நேரடியாக பெறமுடியும். போட்டி தினங்களில் தம்புள்ள பிரேதச சபையில் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய முடியும்.

அதேநேரம் ஒருநாள் தொடருக்கான டிக்கெட்டுகளை ஒக்டோபர் 18ம் திகதி முதல் பல்லேகலை மைதானத்தில் கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், போட்டி தினங்களில் பலகொல்ல அபீதா மைதானத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

இதேவேளை டிக்கெட்டுகள் மேற்குறிப்பிட்ட இடங்களில் காலை 09 மணி முதல் இரவு 08 மணிவரை கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், வித்தியா மாவத்தையில் மாலை 05.30 மணிவரை டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தம்புள்ள மைதானத்தின் டிக்கெட் விலைகள்

T20I

பல்லேகலை மைதானத்துக்கான டிக்கெட் விலைகள்

ODI

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<