இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரும், ஆசிய பதக்கம் வென்றவருமான காலிங்க குமாரகே அடுத்த வார இறுதியில் ஜப்பானின் நிகாட்டாவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கான சுற்றுப்பயணத்தின் வெண்கலப் பிரிவுக்கான போட்டியில் (World Athletics Continental Tour Bronze Label) பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இந்த நிகழ்வில் பங்கேற்கவிருந்த இலங்கையின் மற்றுமொரு நட்சத்திர வீரரான அருண தர்ஷன உடல்நலக்குறைவு காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாகவே காலிங்க குமாரகேவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
- தெற்காசியாவின் அதிவேக கனிஷ்ட வீரரான மெரோன் வீரசிங்க
- பெண்களுக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானிக்கு ஏமாற்றம்
- மெரோனுக்கு இரட்டை தங்கம்; கடைசி நாளில் இலங்கைக்கு 5 தங்கங்கள்
இது தவிர, கடந்த ஜுன் மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய எறிதல் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 85.45 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய இலங்கை சாதனை படைத்த இளம் வீரர் ருமேஷ் தரங்க இந்தப் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டிருந்தாலும், போட்டி ஏற்பாட்டாளர்களிடமிருந்து அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவரும் தனது பங்கேற்பை திரும்பப் பெற முடிவு செய்துள்ளார்.
இந்த ஆண்டு உலகின் சிறந்த ஈட்டி எறிதல் சாதனைகளில் ருமேஷின் சாதனை 13வது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<