இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டிக்கான பாக். குழாம் அறிவிப்பு

93

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் இடம்பெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சதங்களை விளாசி நுவனிது, நிபுன் மற்றும் லசித் குரூஸ்புள்ளே

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, .சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது. 

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஒக்டோபர் 07இல் முல்தான் நகரில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாமே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதியாக தமது சொந்த மண்ணில் நடைபெற்ற இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2-0 என பங்களாதேஷிடம் பறிகொடுத்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து தொடருக்கான முதல் போட்டியில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொண்டுள்ளது 

அந்தவகையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சுழல்பந்துவீச்சாளரான நோமான் அலி மற்றும் வேகப்பந்துவீச்சு சகலைதுறைவீரர் ஆமீர் ஜமால் ஆகியோர் பாகிஸ்தான் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த வீரர்களான மொஹமட் அலி மற்றும் கம்ரான் குலாம் ஆகிய வீரர்களுக்கு பாகிஸ்தான் அணி ஓய்வு வழங்கியிருக்கின்றது. 

இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியானது செப்டம்பர் 30 திகதி பயிற்சிகளுக்காக இணையவிருப்பதோடு, ஒக்டோபர் 01 தொடக்கம் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்காக தயராகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் குழாம் 

 

ஷான் மசூத் (தலைவர்), செளத் சகீல் (பிரதி தலைவர்), ஆமீர் ஜமால், அப்துல்லா சபீக், அப்றார் அஹ்மட், பாபர் அசாம், மிர் ஹம்சா, மொஹமட் ஹூரைரா, மொஹமட் ரிஸ்வான், நசீம் ஷாஹ், நோமான் அலி, சயீம் அய்யூப், சல்மான் அலி அகா, சர்பராஸ் அஹ்மட், சஹீன் அப்ரிடி  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<