அடுத்த மாதம் ஐக்கிய அரபு ராச்சியத்தில் ஆரம்பமாகவிருக்கும் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>> இரண்டாம் நாள் ஆதிக்கத்தை தமதாக்கிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி
பங்காளதேசில் நடைபெறவிருந்த 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் அங்கே நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டது
அதன்படி மாற்றப்பட்ட இந்த தொடர் அடுத்த மாதம் 03ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலையே தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாமரி அத்தபத்து தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில், இந்த ஆண்டுக்கான மகளிர் T20 ஆசியக் கிண்ணத் தொடரினை வென்ற அணியில் காணப்பட்ட வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை இலங்கை மகளிர் அணி இம்மாதம் 23ஆம் திகதி T20 உலகக் கிண்ணத் தொடரிற்காக இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இலங்கை, மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரிற்கான குழு A இல் பெயரிடப்பட்டுள்ளதோடு, முதல் போட்டியில் பாகிஸ்தானை ஒக்டோபர் 03ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
சாமரி அத்தபத்து (தலைவி), ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, கவிஷா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, சச்சினி நிசன்சல, உதேசிகா ப்ரோபதினி, இனோஷி பெர்னாண்டோ, அச்சினி குலசூரிய, இனோக்க ரணவீர, சஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா, சுஹந்திகா குமாரி
- மேலதிக வீராங்கனை: கெளசினி நுத்யாங்கனா
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<