இலகு வெற்றிகளை பதிவு செய்த கோல், கொழும்பு அணிகள்

130

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்து நடாத்தி வரும் தேசிய சுப்பர் லீக் (NSL) ஒருநாள் தொடரின் ஆறாம் நாள் ஆட்டத்தில் இன்று (16) இரண்டு போட்டிகள் நிறைவடைந்தன.

>>நியூசிலாந்து தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

கொழும்பு எதிர் ஜப்னா

கொழும்பு, ஜப்னா அணிகள் மோதிய போட்டி ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா துடுப்பாட்டத்தில் தடுமாறியதோடு 161 ஓட்டங்களுடன் சுருண்டது. ஜப்னா அணியில் அதிகபட்ச ஓட்டங்களை மொஹமட் சமாஸ் (41) பதிவு செய்தார். மறுமுனையில் கொழும்பு அணியின் பந்துவீச்சில் அக்மல் பஸ்லி, கவிந்து நதீசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் சாய்த்தனர். பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய கொழும்பு அணியானது குசல் பெரேரா (46), அவிஷ்க பெர்னாண்டோ (41) ஆகியோரது சிறப்பாட்டங்களுடன் போட்டியின் வெற்றி இலக்கை 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.

ஜப்னா – 161 (31.4) மொஹமட் சமாஸ் 41, அக்மல் பஸ்லி 41/3, கவிந்து நதீசன் 35/3

 

கொழும்பு – 163/5 (25.3) குசல் பெரேரா 46, அவிஷ்க பெர்னாண்டோ 41

 

முடிவு கொழும்பு 5 விக்கெட்டுக்களால் வெற்றி

கண்டி எதிர் கோல்

கண்டி, கோல் அணிகள் இடையில் கொழும்பில் இடம்பெற்ற இந்த மோதலில் யசோதா லங்காவின் அதிரடி சதத்தோடு கோல் அணி, கண்டியை 02 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கோல் அணி வீரரான யசோதா லங்கா வெறும் 77 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 110 ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டி – 197 (49.1) தானுக தாபரே 51, முதித லக்ஷான் 23/4

 

கோல் – 198/8 (33.1) யசோதா லங்கா 110, யோஹான் மத்தகே 59/4

 

முடிவு கோல் 2 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<