மொஹமட் சமாஸ், தீசன் அதிரடியில் ஜப்னா அணி வெற்றி

120

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்து நடாத்தி வரும் தேசிய சுப்பர் லீக் (NSL) ஒருநாள் தொடரின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இன்று (12) இரண்டு போட்டிகள் நிறைவடைந்தன.

>>தென்னாபிரிக்கா தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு

தம்புள்ளை எதிர் ஜப்னா

தம்புள்ளை, ஜப்னா அணிகள் இடையிலான போட்டி ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா அணி மொஹமட் சமாஸின்  அதிரடியோடு 7 விக்கெட்டுக்களை இழந்து 312 ஓட்டங்கள் எடுத்தது. மொஹமட் சமாஸ் சதம் விளாசி 86 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 9 பெளண்டரிகளோடு 112 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய ஆடிய தம்புள்ளை 242 ஓட்டங்களுடன் சுருண்டது. ஜப்னா அணியின் பந்துவீச்சில் தீசன் விதுசன் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பு வெற்றியை உறுதி செய்தார்.

ஜப்னா – 312/7 (50) மொஹமட் சமாஸ் 112, ரவிந்து செம்புகுட்டி 58*, கயான வீரசிங்க 36/2\

 

தம்புள்ளை – 242 (42.2) கயான வீரசிங்க 84, தீசன் விதுசன் 59/3

 

முடிவு ஜப்னா 70 ஓட்டங்களால் வெற்றி

கொழும்பு எதிர் கோல்

கொழும்பில் இடம்பெற்ற இந்த மோதலில் கவிந்து நதீசனின் அதிரடி சுழல் பந்துவீச்சினால் கொழும்பு அணியானது, கோல் வீரர்களை 127 ஓட்டங்களால் வீழ்த்தியது.

கொழும்பு – 228/9 (50) அவிஷ்க பெர்னாண்டோ 44, அகில தனன்ஞய 47/3

 

கோல் – 101 (32.4) கவிந்து நதீசன் 33/5

 

முடிவு கொழும்பு 127 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<