கண்டி, கோல் அணிகளுக்கு இலகு வெற்றிகள்

133

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்து நடாத்தி வரும் தேசிய சுப்பர் லீக் (NSL) ஒருநாள் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (08) நிறைவடைந்தன. 

மூன்றாம் நாள் ஆதிக்கத்தினை முழுமையாக கைப்பற்றிய இலங்கை

தம்புள்ளை எதிர் கண்டி 

தம்புள்ளை, கண்டி அணிகள் இடையிலான போட்டி ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணியை சாமிக்க கருணாரட்னவின் அதிரடி பந்துவீச்சில் 182 ஓட்டங்களோடு கண்டி மடக்கியதோடு 

பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய கண்டி அணியானது 7 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றி இலக்கை அடைந்தது. சாமிக்க கருணாரட்ன 03 விக்கெட்டுக்களை கைப்பற்றி கண்டி அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

தம்புள்ளை 182 (43.2) கயான வீரசிங்க 30, சாமிக்க கருணாரட்ன 32/3 

 

கண்டி 187/7 (38) கவின் பண்டார 48  

 

முடிவுகண்டி 3 விக்கெட்டுக்களால்  வெற்றி  

ஜப்னா எதிர் கோல் 

கொழும்பில் இடம்பெற்ற இந்த மோதலில் முதலில் துடுப்பாடிய ஜப்னா அணி துடுப்பாட்டத்தில் தடுமாறிய நிலையில் அவ்வணிக்கு மொஹமட் சமாஸ் அரைச்சதம் (50) பெற்றுக் கொடுத்தார். இதனால் அவ்வணி 165 ஓட்டங்கள் பெற்றது. பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய ஆடிய கோல் அணியானது சொஹான் டி லிவேரா (74) மற்றும் யசோதா லங்கா (62) இன் ஆகியோரது அரைச்சதங்களோடு போட்டியின் வெற்றி இலக்கை ஒரு விக்கெட்டை இழந்து 168 ஓட்டங்களுடன் அடைந்தது. 

ஜப்னா 165 (42) மொஹமட் சமாஸ் 50, டினுக்க டில்சான் 19/3 

 

கோல் 168/1 (26.1) சொஹான் டி லிவேரா 74*, யசோதா லங்கா 62 

 

முடிவுகோல் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<