திட்டமிடல் நிலையத்தினை (Brain Center) வேறு இடத்திற்கு மாற்றிய இலங்கை கிரிக்கெட்

86
Sri Lanka Cricket

இலங்கை கிரிக்கெட் சபையானது (SLC) திட்டமிடல் நிலையத்தினை (Brain Center) இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் இருந்து புதிய இடத்திற்கு மாற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

>>பெடிங்கமின் அதிரடி ஆட்டத்துடன் வெற்றியீட்டிய தென்னாபிரிக்கா A அணி<<

அதன்படி திட்டமிடல் நிலையமானது தற்போது இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் இருந்து ஆர். பிரேமதாச மைதானத்தில் அமைந்திருக்கும் கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்திற்கு (High Perfomance Center) மாற்றப்பட்டிருக்கின்றது 

இதேநேரம் புதிதாக கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டமிடல் நிலையத்தில் கிரிக்கெட் ஆய்வு (Advanced Cricket Analytics), திறமை வள அபிவிருத்தி (Talent Development) மற்றும் ஏனைய வியூகங்கள்(Strategy) சார்ந்த விடயங்கள் ஆராயப்படவிருக்கின்றன. 

அதேநேரம் புதிய திட்டமிடல் நிலையமானது இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா மூலம் திறந்து வைக்கப்பட்டதோடு, ஆரம்ப நிகழ்வில் Dr. ஜயன்த தர்மதாச, இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதி தலைவர் திரு. சுஜீவ கொடலியத்த, இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று அதிகாரி (CEO) ஏஷ்லி டி சில்வா மற்றும் ஏனைய முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர் 

>>ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025: இறுதிப் போட்டி திகதிகள் அறிவிப்பு<<

புதிய திட்டமிடல் நிலையமானது மாற்றப்பட்டதற்கான பிரதான காரணமாக கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையாக இருக்கும் பயிற்சிகளையும், திறன் சார்ந்த விடயங்களையும் ஒரே நேரத்தில் வழங்குவது இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<