பொதுநலவாய வேகநகர்வு செஸ் போட்டியில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்

The Commonwealth Blitz Chess Championship 2024

105

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய விரைவு (பிளிட்ஸ்) செஸ் போட்டியில் இலங்கை வீரர்கள் 4 தங்கம், 7 வெண்கலம் உட்பட 11 பதக்கங்களை வென்றெடுத்தனர்.  

இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றிய இந்தப் போட்டித் தொடரானது வஸ்கடுவை, சைட்ரஸ் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது.   

இதில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் கொழும்பு மியூசியஸ் கல்லூரி சந்துலா தஹம்தி, 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் கண்டி, மஹமாயா மகளிர் கல்லூரியின் அமீஷா ஷெனாலி விஜேசிங்க, 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் விச்சர்லி சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஒஷினி தேவிந்தயா மற்றும் 10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் கொழும்பு ஆனந்த கல்லூரியின் தெஹஸ் ரித்மிக கிரிக்கொட ஆகிய வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தனர் 

இது தவிர, 18 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் கசந்து உபேக்ஷா திசாநாயக்க, 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் ஏஷா மிஷேலா பால்லி, 16 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் பி. கல்கொட்டுவ, 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் தெருணி ஜயசுந்தர, 10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் செதிக்கா ஹன்சிரா சமரவீர, 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் இசலி லீலானந்த, 8 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் எலீஷா பெர்னாண்டோ ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர் 

இந்தப் போட்டியில் இந்தியா மொத்தம் 9 தங்கப் பதக்கங்களையும், 13 வெள்ளிப் பதக்கங்களையும், 6 வெண்கலப் பதக்கங்களையும் வென்றெடுத்தது. 

இந்தப் போட்டியின் மற்ற அனைத்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் இந்திய செஸ் வீரர்கள் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா 9 தங்கப் பதக்கங்கள், 13 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை வென்று, மொத்தம் 28 பதக்கங்களுடன் பிளிட்ஸ் செஸ் பதக்க பட்டியலில் முன்னிலை வகித்தது. 

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<