நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தம் அறிவிப்பு!

New Zealand Cricket

93

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தை முதன்முறையாக சகலதுறை வீரர்களான நேதன் ஸ்மித் மற்றும் ஜோஸ் கிலார்க்சன் ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர். 

டெவோன் கொன்வே மற்றும் பின் எலன் ஆகியோர் சர்வதேச T20 தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் மத்திய ஒப்பந்தத்தை மறுத்திருந்தனர். 

உதார, ஹேமந்தவின் பிரகாசிப்புகளுடன் தொடரை வென்ற  இலங்கை A அணி

குறித்த இந்த இரண்டு வீரர்களுக்கு பதிலாக நேதன் ஸ்மித் மற்றும் ஜோஸ் கிலார்க்சன் ஆகிய இரண்டு வீரர்களும் வருடாந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர். 

இதில் நேதன் ஸ்மித் இதுவரை நியூசிலாந்து அணிக்காக அறிமுகமாத நிலையில், ஜோஸ் கிலார்க்சன் 6 T20I போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

இந்த வீரர்களுடன் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்களான டொம் லேத்தம், டெரைல் மிச்சல், டிம் சௌதி, கிளேன் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்களும் மத்திய ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒப்பந்தம் பெற்றுள்ள வீரர்கள் 

டொம் பிலண்டல், மைக்கல் பிரேஸ்வல், மார்க் செப்மன், ஜோஸ் கிலார்க்ஸன், ஜேகப் டபி, மெட் ஹென்ரி, கெயல் ஜெமிஸன், டொம் லேத்தம், டெரைல் மிச்சல், ஹென்ரி நிக்கோல்ஸ்ட், வில் ஓரர்க், அஜாஸ் பட்டேல், கிளேன் பில்லிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிச்சல் செண்ட்னர், பென் சீர்ஸ், நேதன் ஸ்மித், இஸ் சோதி, டிம் சௌதி, வில் யங் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<