அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை U19 மகளிர் அணி

Sri Lanka U19 Womens team tour of Australia 2024

82
Sri Lanka U19 Tour of Australia 2024

இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவுள்ளது. 

குறித்த இந்த தொடரானது செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளதுடன் இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

>> ரூட்டின் அசத்தல் சதத்தோடு இங்கிலாந்து முன்னிலை

T20 போட்டிகளில் ஒவ்வொரு அணிகளும் தலா இரண்டு தடவைகள் மோதவுள்ளதுடன், ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு தடவை பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

அதன்படி T20 தொடர் செப்டம்பர் 20ம் திகதி முதல் 26ம் திகதிவரையும், ஒருநாள் தொடர் செப்டம்பர் 30 மற்றும் முதலாம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 

போட்டி அட்டவணை 

T20 தொடர் 

  • செப்டம்பர் 20 – இலங்கை எதிர் நியூசிலாந்து (அலென் பெட்டிகிரவ் ஓவல்) 
  • செப்டம்பர் 22 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா (இயன் ஹேலி ஓவல்) 
  • செப்டம்பர் 25 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா (பில் பிப்பென் ஓவல்) 
  • செப்டம்பர் 26 – இலங்கை எதிர் நியூசிலாந்து (பில் பிப்பென் ஓவல்) 

ஒருநாள் தொடர் 

  • செப்டம்பர் 30 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா (அலென் பெட்டிகிரவ் ஓவல் 
  • ஒக்டோபர் 01 – இலங்கை எதிர் நியூசிலாந்து (அலென் பெட்டிகிரவ் ஓவல்) 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<