சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர்

5
Dawid Malan retires from international cricket

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான டாவிட் மலான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணியானது அடுத்த மாதம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக அறிவிக்கப்பமட்ட இங்கிலாந்து T20i அணியில் அனுபவ வீரர்களான ஜொனி பேர்ஸ்டோவ், மொயின் அலி உள்ளிட்டோர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர் 

மேலும், இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாவிட் மலானிற்கு இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வரும் டாவிட் மலான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 

டாவிட் மலான் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமானார். இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 9 அரைச் சதங்களுடன் 1,074 ஓட்டங்களையும், 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 7 அரைச் சதங்கள் என 1,450 ஓட்டங்களையும், T20i கிரிக்கெட்டில் 62 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 16 அரைச் சதங்கள் என 1,892 ஓட்டங்களையும் குவித்துள்ளார். அதிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 55.8 சராசரியையும், T20i கிரிக்கெட்டில் 36.4 சராசாரியையும் வைத்துள்ளார் 

மேலும் ஐசிசி T20i துடுப்பாட்ட வீரர்ககளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த டாவிட் மலான், கடந்த 2022ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்த நிலையில், தற்சமயம் 37 வயதை எட்டியுள்ள டாவிட் மலான் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.   

தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய டாவிட் மலான், ‘நான் வளர்ந்ததற்கு டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் உதவியாக இருந்தது. சில சமயங்களில் நான் நன்றாக விளையாடினேன், ஆனால் இடையில் போதுமான அளவு அல்லது எனது துடுப்பாட்ட போர்ம் போதுமானதாக இல்லை, அது ஏமாற்றத்தை அளித்தது, ஏனென்றால் நான் அதை விட சிறந்த வீரராக உணர்ந்தேன். அதன்பின் நான் மீண்டும், வெள்ளைபந்து கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி என்மீதான விமர்சனங்களை மாற்றினேன். நான் மூன்று வடிவ கிரிக்கெட்டையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டேன், ஆனால் நான் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது அதிக தீவிரம் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். ஏனெனில் என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொள்வதுடன், எனக்கு பிடித்த துடுப்பாட்ட பிரயோகங்களையும் விளையாட முடியும். அனால் என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறதுஎன்று தெரிவித்துள்ளார். 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<