இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான மார்க் வூட் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>கமிந்து – சண்டிமாலின் போராட்டத்தை தாண்டி இலங்கை தோல்வி<<
மார்க் வூட் மன்செஸ்டரில் நடைபெற்று முடிந்த இலங்கைத் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மூன்றாம் நாளின் போது தசை உபாதைக்கு உள்ளாகியிருந்தார். இந்த நிலையில் அவர் குறிப்பிட்ட டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் பந்துவீச மைதானத்திற்கும் வருகை தந்திருக்கவில்லை.
விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் மார்க் வூட், இலங்கை டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் மார்க் வூடின் பிரதியீடாக அறிமுக வேகப் பந்துவீச்சாளரான ஜோஸ் ஹல் அழைக்கப்பட்டிருக்கின்றார். லெய்க்கெஷ்டர்ஷயர் (Leicestershire) அணி வீரரான அவர் குறிப்பிட்ட கழக அணி 2023ஆம் ஆண்டுக்கான உள்ளூர் ஒருநாள் கிண்ணத் தொடரினை வெற்றி கொள்ள முக்கிய பங்களிப்பினை வழங்கியதோடு, அண்மையில் நிறைவுக்கு இங்கிலாந்து லயன்ஸ் – இலங்கை அணிகள் இடையிலான பயிற்சிப் போட்டியில் இலங்கையை வீழ்த்த முக்கிய காரணமாகவும் மாறியிருந்தார்.
இதேநேரம் இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்க, இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (29) லோர்ட்ஸ் அரங்கில் ஆரம்பமாகுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<