தென்னாபிரிக்கா செல்லும் இலங்கை A அணியில் மொஹமட் சிராஸ்

102

தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் பங்கெடுக்கும் இலங்கை A கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் குழாம்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

>>இலங்கை A – தென்னாபிரிக்கா A தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

தென்னாபிரிக்காவிற்கு இவ்வார இறுதியில் செல்லும் இலங்கை A கிரிக்கெட் அணியானது அங்கே உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடர்களில் ஆடவிருக்கின்றது.

அதன்படி இந்த சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட தொடர்களுக்கான இலங்கை A கிரிக்கெட் அணியின் தலைவராக பசிந்து சூரியபண்டார நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். அத்துடன் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் நடைபெறும்  ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட தொடர்களின் போட்டிகளில் முன்னணி பந்துவீச்சாளராக மொஹமட் சிராஸிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் அனுபவமிக்க ஆரம்பத் துடுப்பாட்டவீரரான ஒசத பெர்னாண்டோ நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடரில் ஆட இணைக்கப்பட்டுள்ளார். இன்னும் முன்வரிசைத் துடுப்பாட்டவீரரான நுவனிது பெர்னாண்டோ, துடுப்பாட்ட சகலதுறைவீரர் ஜனித் லியனகே ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த வீரர்கள் தவிர இலங்கையின் A குழாம்கள் உள்ளூர் தொடர்களில் பிரகாசித்த பல இளம் வீரர்களோடு பூரணப்படுத்தப்பட்டிருக்கின்றது. இலங்கை A கிரிக்கெட் அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் முதலவதாக ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளதோடு மூன்று போட்டிகள் கொண்ட அந்த தொடர் இம்மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகுகின்றது. இதேவேளை நான்கு நாட்கள் கொண்ட தொடர் செம்டம்பர் 8 திகதி இடம்பெறுகின்றது.

ஒருநாள் குழாம்

 

லஹிரு உதார, கமில் மிசார, பசிந்து சூரியபண்டார (தலைவர்), பவன் ரத்நாயக்க, நுவனிது பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே, துஷான் ஹேமன்த, சோனால் தினுஷ, சாமிக்க குணசேகர, மொஹமட் சிராஸ், வனுஜ சஹான், சமிந்து விக்ரமசிங்க, எஷான் மலிங்க, தினுர கலுப்பான, கவிந்து நதீஷன்

 

நான்கு நாட்கள் தொடர்

 

பசிந்து சூரியபண்டார (தலைவர்), லஹிரு உதார, பவன் ரத்நாயக்க, நுவனிது பெர்னாண்டோ, அஹான் விக்ரமசிங்க, சோனால் தினுஷ, சாமிக்க குணசேகர, மொஹமட் சிராஸ், நிஷான் பிரீஸ், வனுஜ சஹான், இசித விஜேசுந்தர, எஷான் மலிங்க, ஒசத பெர்னாண்டோ, விஷாத் ரன்திக்க, ஜனித் லியனகே, தினுர கலுப்பான

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<