இலங்கை A மற்றும் தென்னாபிரிக்கா A அணிகளுக்கு இடையிலான மூன்று 50 ஓவர்கள் கொண்ட போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாட்கள் கொண்ட போட்டிகள் என்பவற்றுக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை A அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்குறித்த போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
>>இலங்கை அணிக்காக போராடிய மிலான், தனன்ஞய<<
குறித்த இந்த தொடர் இம்மாதம் 31ம் திகதி 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளுடன் ஆரம்பிக்கவுள்ளது. மூன்று ஐம்பது ஓவர்கள் கொண்ட தொடர் பொட்செப்ஸ்ரோமில் நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து செப்டம்பர் 8 முதல் 11ம் திகதிவரை முதல் நான்கு நாள் போட்டி கிம்பர்லேயில் நடைபெறவுள்ளது. இரண்டாவது நான்கு நாள் போட்டி 15ம் திகதி முதல் 18ம் திகதிவரை பெனோனியில் நடைபெறவுள்ளது.
போட்டி அட்டவணை
- முதல் ஒருநாள் – ஆகஸ்ட் 31 (பொட்செப்ஸ்ரோம்)
- இரண்டாவது ஒருநாள் – செப்டம்பர் 02 (பொட்செப்ஸ்ரோம்)
- மூன்றாவது ஒருநாள் – செப்டம்பர் 04 (பொட்செப்ஸ்ரோம்)
- முதல் நான்கு நாள் போட்டி – செப்டம்பர் 08 – 11 (கிம்பர்லே)
- இரண்டாவது நான்கு நாள் போட்டி – செப்டம்பர் 15 – 18 (பெனோய்)
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<