தென்னாபிரிக்காவிற்கு எதிரான மே.இ.தீவுகள் T20 குழாம் அறிவிப்பு

94
west-indies-team

சுற்றுலா தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான T20 தொடரில் பங்கெடுக்கும் மேற்கிந்திய தீவுகளின் 15 பேர் அடங்கிய வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

>>பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வி<<

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை அடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடுகின்றது 

இந்த T20I தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ட்ரினிடாட்டில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இந்த தொடரில் பங்கெடுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது 

அந்தவகையில் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் அனுபவ வீரர்களான அதிரடிசகலதுறை நட்சத்திரம் அன்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது 

மறுமுனையில் மேற்கிந்திய தீவுகள் T20 அணியின் உபதலைவர் அல்சாரி ஜோசேப், T20 உலகக் கிண்ணத்தில் உபாதைக்குள்ளான பிரண்டன் கிங் ஆகியோருக்கும் ஓய்வு பெறும் ஏனைய வீரர்களாக மாறுகின்றனர்அல்சாரி ஜோசேப்பிற்குப் பதிலாக ரொஸ்டன் சேஸ் மேற்கிந்திய தீவுகள் அணியின் உப தலைவராக பெயரிடப்பட்டிருக்கின்றார் 

அதேநேரம் லங்கா பிரீமியர் லீக் (LPL) 2024 தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்ய காரணமாக அமைந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான பேபியன் அலன், மேற்கிந்திய தீவுகள் அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

>>ஹர்சிதாவின் சதம் வீண்; தொடரை 2-0 என இழந்தது இலங்கை!<<

மேற்கிந்திய தீவுகள்தென்னாபிரிக்க அணிகள் இடையிலான T20 தொடரின் மூன்று போட்டிகளும் ட்ரினடாட்டில் நடைபெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

மேற்கிந்திய தீவுகள் குழாம்:  

ரொவ்மன் பவல் (அணித்தலைவர்), ரொஸ்டன் சேஸ் (உப தலைவர்), அலீக் அதான்சே, பேபியன் அலன், ஜோன்சன் சார்ள்ஸ், மெதிவ் போர்டே, சிம்ரன் ஹேட்மேயர், சாய் ஹொப், அகேல் ஹொசைன், சமார் ஜோசேப், ஒபேட் மெக்கோய், குடாகேஷ் மோட்டி, நிகோலஸ் பூரான், ஷேர்பானே ரத்தர்போட், ரோமாரீயோ ஷெப்பர்ட் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<