ஊக்க மருந்து பாவித்த குற்றச்சாட்டில் தடையினைப் பெறும் டிக்வெல்ல

319

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் போது ஊக்க மருந்து பாவித்த குற்றச்சாட்டிற்காக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான நிரோஷன் டிக்வெல்ல அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட உடனடி அமுலுக்கு வரும் வகையில் தடை வழங்கப்பட்டிருக்கின்றது.  

சிட்னி தண்டர் அணியுடன் மீண்டும் இணையும் சமரி அதபத்து!

அத்துடன் டிக்வெல்லவிற்கு வழங்கப்பட்டிருக்கும் போட்டித்தடை மீள் அறிவித்தல் ஒன்று வரும் வரையில் தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

இலங்கையின் ஊக்க மருந்து தடுப்பு அதிகாரசபை (SLADA) இலங்கை கிரிக்கெட் சபையுடன் LPL 2024ஆம் ஆண்டு தொடருக்காக இணைந்து மேற்கொண்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே கோல் மார்வல்ஸ் அணியின் தலைவரான நிரோஷன் டிக்வெல்ல ஊக்க மருந்து பாவித்த விடயம் கண்டறியப்பட்டிருக்கின்றது 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வரும் விடயங்களினைக் கருத்திற் கொள்ளும் போது இலங்கை கிரிக்கெட் சபையானது விளையாட்டில் நேர்மைத்தன்மையினை உறுதி செய்யும் விதத்திலேயே இவ்வாறான ஊக்க மருந்து பரிசோதனைகளை தொடர்ச்சியாக செய்து வருவதாக தெரிவித்திருக்கின்றது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<