இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த போதும், உத்தியோகபூர்வமாக இந்திய கிரிக்கெட் சபை வெளியிடாமல் இருந்தது.
>> பயிற்சிப் போட்டி துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை வீரர்கள்
எவ்வாறாயினும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக மோர்னே மோர்கல் செயற்படுவார் என இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் IPL தொடரில் லக்னோவ் சுபர் ஜயண்ட் அணியின் பயிற்றுவிப்பு குழாத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளனர். எனவே கம்பீருடைய பரிந்துரையின் பேரில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக மோர்னே மோர்கல் இணைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
மோர்னே மோர்கல் IPL தொடரில் மாத்திரமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். எனினும் தன்னுடைய பதவிக்காலம் நிறைவடையும் முன்னர் பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<