தி ஹண்ட்ரட் தொடரிலிருந்து பாதியில் அழைக்கப்பட்ட கிரிஸ் வோக்ஸ்!

Sri Lanka tour of England 2024

120

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால் இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் கிரிஸ் வோக்ஸ் தி ஹண்ட்ரட் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

தி ஹண்ட்ரட் தொடரில் பேர்மிங்கம் பீனிக்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிரிஸ் வோக்ஸ், அந்த அணியின் அடுத்த இரண்டு லீக் போட்டிகளிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

தனது உயிரினை மாய்த்துக் கொண்ட இங்கிலாந்து துடுப்பாட்ட நட்சத்திரம்

இந்தநிலையில் இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் தி ஹண்ட்ரட் தொடரில் வைத்து தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். எனவே குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கும் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரரான கிரிஸ் வோக்ஸின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் அவரை தி ஹண்ட்ரட் தொடரிலிருந்து விடுவிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது. 

பென் ஸ்டோக்ஸின் உபாதை தொடர்பான முழுமையான அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், அவர் தொடரிலிருந்து வெளியேறும் பட்சத்தில் கிரிஸ் வோக்ஸ் முதன்மை வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரராக விளையாட வேண்டும். இதன்காரணமாகவே கிரிஸ் வோக்ஸ் உடனடியாக தி ஹண்ட்ரட் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

அதேநேரம் ஏற்கனவே இலங்கை தொடருக்கான அணியிலிருந்து விலகியுள்ள ஷெக் கிரவ்லேவுக்கு பதிலாக டேன் லோவ்ரன்ஸ் அணியில் இணைக்கப்படுவார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இவரை தவிர்த்து முன்வரிசை வீரராக இங்கிலாந்து குழாத்தில் புதுமுக வீரர் ஜோர்டன் கொக்ஸ் வாய்ப்பை பெற்றுள்ளார். 

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<