இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

Sri LankaTour England 2024

5
Sri LankaTour England 2024

இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் இம்மாதம் 21ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (04) அறிவித்துள்ளது இதில் அண்மையில் நிறைவடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 3க்கு 0 என கைப்பற்றிய இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த வீரர்கள் அனைவரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸாக் கிரௌலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த டிலன் பென்னிங்டனிற்கும் இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 23 வயது விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜோர்டன் கொக்ஸ் அறிமுக வீரராக இங்கிலாந்து குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல, 3 ஆண்டுகளுக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ஸ்டோன் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி விபரம்: பென் ஸ்டோக்ஸ் (அணித்தலைவர்), கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹெரி ப்ரூக், ஜோர்டன் கொக்ஸ், பென் டக்கெட், டேனியல் லோரன்ஸ், ஒல்லி போப், மெத்யூ பொட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

இங்கிலாந்து – இலங்கை டெஸ்ட் தொடர் விபரம்

  • முதல் டெஸ்ட் – மான்செஸ்டர் (ஆகஸ்ட் 21 முதல் 25 வரை)
  • 2-வது டெஸ்ட் – லண்டன் (ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2)
  • 3-வது டெஸ்ட் – லண்டன் (செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 10 வரை)

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<