Home Tamil அசத்தல் வெற்றியோடு ஒருநாள் தொடரில் முன்னேறும் இலங்கை அணி

அசத்தல் வெற்றியோடு ஒருநாள் தொடரில் முன்னேறும் இலங்கை அணி

India tour of Sri Lanka 2024

17
India tour of Sri Lanka 2024 - 2nd ODI

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை 32 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> வனிந்து ஹஸரங்கவை இழக்கும் இலங்கை அணி

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகிய போட்டியின் நாணய சுழற்சியில் வென்றிருக்கும் இலங்கை அணியின் தலைவர் சரித் அசலன்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை குழாம் முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய வனிந்து ஹஸரங்க மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோரிற்குப் பதிலாக ஜெப்ரி வன்டர்செய், கமிந்து மெண்டிஸ் ஆகியோரினை இணைத்திருந்தது. மறுமுனையில் இந்திய அணி மாற்றங்களின்றி ஆடியிருந்தது.

இலங்கை பதினொருவர்

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லாலகே, அகில தனன்ஞய, அசித பெர்னாண்டோ, ஜெப்ரி வன்டர்செய்

இந்தியா பதினொருவர்

ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், சிவம் டுபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷார் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், மொஹமட் சிராஜ்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய இலங்கை அணியானது போட்டியின் முதல் பந்திலேயே பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. பெதும் நிஸ்ஸங்க விக்கெட்காப்பாளரிடம் பிடிகொடுத்து ஓட்டமேதுமின்றி ஓய்வறை நடந்தார்.

பெதும் நிஸ்ஸங்கவின் பின்னர் அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் ஜோடி இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 74 ஓட்டங்கள் பகிர்ந்த நிலையில் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட் பறிபோனது. குசல் மெண்டிஸ் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக 30 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். மெண்டிஸின் பின்னர் அவிஷ்க பெர்னாண்டோவின் விக்கெட் அவர் 40 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பறிபோனது.

குசல் மெண்டிஸை அடுத்து இலங்கை அணியின் மத்திய வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் தடுமாறிய போதிலும் துனித் வெல்லாலகே – கமிந்து மெண்டிஸ் ஜோடியின் பொறுப்பான இணைப்பாட்டத்தோடு இலங்கை அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்கள் எடுத்தது.

>> இலங்கை T20I அணியிலிருந்து விலகும் சமரி அதபத்து!

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 44 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்கள் பெற்றதோடு, துனித் வெல்லாலகே 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 39 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் வோஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 241 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணியானது ரோஹிட் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் மூலம் சிறந்த ஆரம்பம் ஒன்றினைப் பெற்ற போதிலும், இலங்கை அணி சார்பில் ஜெப்ரி வன்டர்செய் தனது சுழல் மூலம் இந்தியாவிற்கு நெருக்கடி வழங்கினார்.

இந்த நெருக்கடியினை சரித் அசலன்க தனது பந்துவீச்சு மூலம் மேலும் கடினமாக்க அதில் இருந்து மீள முடியாத இந்திய அணியானது 42.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 208 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ரோஹிட் சர்மா 44 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்கள் எடுக்க, அக்ஷார் பட்டேல் 44 ஓட்டங்களை எடுத்து போராடினார்.

இலங்கைப் பந்துவீச்சு சார்பில் ஜெப்ரி வன்டர்செய் 33 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்த்து ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சு பெறுதியினைப் பதிவு செய்ய, சரித் அசலன்க 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

போட்டியின் ஆட்டநாயகன் விருது ஜெப்ரி வன்டர்செயிற்கு வழங்கப்பட்டது. அடுத்ததாக இலங்கை – இந்திய அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் புதன்கிழமை (07) நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

Result


Sri Lanka
240/9 (50)

India
208/10 (42.2)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c KL Rahul b Mohammed Siraj 0 1 0 0 0.00
Avishka Fernando c & b Washington Sundar 40 62 5 0 64.52
Kusal Mendis lbw b Washington Sundar 30 42 3 0 71.43
Sadeera Samarawickrama c Virat Kohli b Axar Patel 14 31 1 0 45.16
Charith Asalanka c Axar Patel b Washington Sundar 25 42 3 0 59.52
Janith Liyanage  c & b Kuldeep Yadav 12 29 0 0 41.38
Dunith Wellalage c Shivam Dube b Kuldeep Yadav 39 35 1 2 111.43
Kamindu Mendis run out (Shreyas Iyer) 40 44 4 0 90.91
Akila Dananjaya run out (Rohit Sharma) 15 13 2 0 115.38
Jeffery Vandersay not out 1 1 0 0 100.00


Extras 24 (b 9 , lb 8 , nb 0, w 7, pen 0)
Total 240/9 (50 Overs, RR: 4.8)
Bowling O M R W Econ
Mohammed Siraj 8 1 43 1 5.38
Arshdeep Singh 9 0 58 0 6.44
Axar Patel 9 0 38 1 4.22
Shivam Dube 2 0 10 0 5.00
Washington Sundar 10 1 30 3 3.00
Kuldeep Yadav 10 1 33 2 3.30
Rohit Sharma 2 0 11 0 5.50


Batsmen R B 4s 6s SR
Rohit Sharma c Pathum Nissanka b Jeffery Vandersay 64 44 5 4 145.45
Shubman Gill c Kusal Mendis b Jeffery Vandersay 35 44 3 0 79.55
Virat Kohli lbw b Jeffery Vandersay 14 19 2 0 73.68
Shivam Dube lbw b Jeffery Vandersay 0 4 0 0 0.00
Axar Patel c & b Charith Asalanka 44 44 4 2 100.00
Shreyas Iyer lbw b Jeffery Vandersay 7 9 1 0 77.78
KL Rahul b Jeffery Vandersay 0 2 0 0 0.00
Washington Sundar lbw b Charith Asalanka 15 40 0 0 37.50
Kuldeep Yadav not out 7 27 0 0 25.93
Mohammed Siraj lbw b Wanindu Hasaranga 4 18 0 0 22.22
Arshdeep Singh run out (Kusal Mendis) 3 4 0 0 75.00


Extras 15 (b 4 , lb 6 , nb 1, w 4, pen 0)
Total 208/10 (42.2 Overs, RR: 4.91)
Bowling O M R W Econ
Asitha Fernando 7 0 31 0 4.43
Dunith Wellalage 6 0 41 0 6.83
Akila Dananjaya 10 0 54 0 5.40
Kamindu Mendis 3 0 19 0 6.33
Jeffery Vandersay 10 0 33 6 3.30
Charith Asalanka 6.2 0 20 3 3.23