வனிந்து ஹஸரங்கவை இழக்கும் இலங்கை அணி

162
Hasaranga out from Indian ODI series 2024

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் இருந்து நட்சத்திர சகலதுறைவீரரான வனிந்து ஹஸரங்க வெளியேறி இருக்கின்றார்.

இலங்கை – இந்திய அணிகள் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் வனிந்து ஹஸரங்கவிற்கு, பந்துவீசும் சந்தர்ப்பத்தில் இடது காலில் தசை உபாதை ஏற்பட்டிருந்தது.

த்ரில்லராக நிறைவுக்கு வந்த இலங்கை – இந்திய மோதல்

இந்த தசை உபாதைக்கான மருத்துவ பரிசோதனைகளை அடுத்து அவர் இந்திய அணியுடன் எஞ்சியிருக்கும் ஒரு நாள் தொடரின் இரண்டு போட்டிகளிலும் பங்குபெறமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஹஸரங்கவின் பிரதியீடாக சுழல்பந்துவீச்சாளரான ஜெப்ரி வன்டர்செய் இலங்கை குழாத்தினுள் அழைக்கப்பட்டிருக்கின்றார்.

இதேநேரம் இலங்கை இந்திய அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்ததோடு, வனிந்து ஹஸரங்க குறித்த போட்டியில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, துடுப்பாட்டத்திலும் சிறு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை இலங்கை இந்திய அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (03) நடைபெறவிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<