இலங்கை அணிக்காக சர்வதேச அறிமுகம் பெறும் மொஹமட் சிராஸ்

8
India tour of Sri Lanka 2024 - 1st ODI

சுற்றுலா இந்தியா மற்றும் இந்திய அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சற்று முன்னர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது.

>> இலங்கை குழாத்தில் இணையும் எசான் மாலிங்க, மொஹமட் சிராஸ்!

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணியின் தலைவரான சரித் அசலன்க போட்டியில் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருக்கின்றார்.

இப்போட்டிக்கான இலங்கை அணியானது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸிற்கு அறிமுகம் வழங்கியிருக்கின்றது. அத்துடன் சுழல்வீரரான அகில தனன்ஞய இலங்கை அணியில் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கின்றார். மறுமுனையில் இந்திய அணி தமது சிரேஷ்ட வீரர்களான விராட் கோலி மற்றும் அணித்தலைவர் ரோஹிட் சர்மா ஆகியோருடன் இன்றைய போட்டியில் களம் காண்கின்றது.

இலங்கை பதினொருவர்

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, அகில தனன்ஞய, அசித பெர்னாண்டோ, மொஹமட் சிராஸ்

இந்தியா பதினொருவர்

ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், சிவம் டுபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷார் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், மொஹமட் சிராஜ்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<