இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான நுவான் துஷார இந்திய அணிக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>பாகிஸ்தான் செல்லும் இலங்கை A அணி; போட்டி அட்டவணை வெளியானது<<
நுவான் துஷார இந்திய அணிக்கு எதிராக இவ்வாரம் ஆரம்பமாகும் T20I போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பயிற்சிகளை மேற்கொண்ட போது விரல் உபாதைக்கு முகம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட விரல் உபாதையின் காரணமாகவே நுவான் துஷார இந்திய அணியுடன் நடைபெறவிருக்கும் போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றார்.
இதேநேரம் நுவான் துஷாரவின் பிரதியீட்டு வீரர் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீரவினையும் இலங்கை அணி இழந்திருந்த நிலையில் நுவான் துஷாரவின் இழப்பும் பாரிய பின்னடைவாகியிருக்கின்றது.
இலங்கை – இந்திய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் இந்த சனிக்கிழமை (27) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<