இலங்கை – இந்திய தொடருக்கான டிக்கெட் விலைகள் அறிவிப்பு

India tour of Sri Lanka 2024

210

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான டிக்கெட் விலைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கண்டிபல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்று T20I போட்டிகளுக்கான டிக்கெட் விலைகள் 500 ரூபா முதல் 10,000 ரூபா வரை விற்பனை செய்யப்படவுள்ளன. 

அதேநேரம் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான டிக்கெட்டுகள் 500 ரூபா முதல் 7500 ரூபா வரை விற்பனை செய்யப்படவுள்ளன.

தினேஷ் சந்திமாலின் வருகையோடு முக்கிய மாற்றங்களுடன் இலங்கை T20I அணி

ரசிகர்கள் டிக்கெட்டுகளை இலங்கை கிரிக்கெட் சபையின் https://mycricket.com.lk/slcb-ticketing-frontend-ticketing-platform-ui/home என்ற இணையத்தளத்திற்குள் சென்று கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் நாளை முதல் (24)  பின்வரும் இடங்களில் நேரடியாக சென்று டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

போட்டி தினங்களில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் 

  • அபீதா மைதானம் பல்லேகலை (10 மணி முதல் 06 மணிவரை) 
  • வித்யா மாவத்தை (எஸ்.எஸ்.சி மைதானத்துக்கு அருகில்) (10 மணி முதல் 06 மணிவரை) 
  • புதிய போதிராஜ மாவத்தைஒருகொடவத்த (10 மணி முதல் 06 மணிவரை) 

போட்டி அல்லாத தினங்களில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் 

  • கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானம் (10 மணி முதல் 06 மணிவரை) 
  • பல்லேகலை மைதானம் (ஊடக பிரிவு) (10 மணி முதல் 06 மணிவரை) 
  • வித்யா மாவத்தை (எஸ்.எஸ்.சி மைதானத்துக்கு அருகில்) (10 மணி முதல் 06 மணிவரை) 

டிக்கெட் விலைகள் (பல்லேகலை)

  • புற்தரை  அரங்கம் – 500 
  • A, B அடித்தட்டு – 2000 
  • கிரேண்ட் ஸ்டேண்ட் டொப் லெவல் – 5000 
  • கிரேண்ட் ஸ்டேண்ட் டொப் லெவல் 22 சீட் பொக்ஸ் – 10,000 

டிக்கெட் விலைகள் (கொழும்பு)

  • C மற்றும் D அடித்தட்டு – 500 
  • C மற்றும் D உயர்தட்டு – 2000 
  • A மற்றும் B அடித்தட்டு – 3000
  • A மற்றும் B உயர்தட்டு – 4000
  • கிரேண்ட் ஸ்டேண்ட் டொப் லெவல் – 7500

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<