பங்களாதேஷின் நிலைமைகளை அவதானிக்கும் சர்வதேச கிரிக்கெட் வாரியம்

2

பங்களாதேஷில் தற்போது நிலவி வருகின்ற கலவர நிலைமைகள் தொடர்பில் கொழும்பில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்  (ஐ.சி.சி.) இன் கூட்டத் தொடரின் போது கருத்திற் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>இலங்கை வரும் இந்திய அணிக்கு புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளர்

பங்களாதேஷில் இந்த ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த தொடர் தற்போது அங்கே நிலவி வருகின்ற போராட்டங்கள் காரணமாக இடம்பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட முடியும் எனக் கூறப்பட்டிருக்கும் நிலையிலேயே, ஐ.சி.சி. இன் கூட்டத் தொடரின் போது பங்களாதேஷ் குறித்து கவனத்திற் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

எனினும் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷில் நடாத்தாமல் போவதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

”குறித்த (மகளிர் T20 உலகக் கிண்ணத்) தொடருக்கு இன்னும் சில காலம் இருப்பதனால், நாங்கள் கவனமாக நிலைமைகளை அவதானிக்கின்றோம். நிலைமைகள் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னேற்றம் கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.”

மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் இம்முறை 10 அணிகள் பங்கெடுப்பதோடு, அதில் மொத்தம் 23 போட்டிகள் 18 நாட்கள் கொண்ட இடைவெளியில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் ஒக்டோபர் 03 தொடக்கம் 20 வரை சில்லேட் மற்றும் டாக்கா ஆகிய இடங்களில் நடைபெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

>>நான்காவது முறையாக LPL சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ்

பங்களாதேஷில் அரச தொழில்களுக்காக கொடுக்கப்படும் ஒதுக்கீடுகளில் நிலவும் பக்கச் சார்பு நிலைமைகளை கண்டித்து அங்கே கடந்த சில நாட்களாக போராட்டம் நிலவி வருவதோடு, அதனால் பங்களாதேஷில் ஊரடங்கு மற்றும் கலவர நிலைமைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<