Home Tamil கொழும்பினை நொக்அவுட் செய்த கண்டி பல்கோன்ஸ்

கொழும்பினை நொக்அவுட் செய்த கண்டி பல்கோன்ஸ்

248
Colombo Strikers vs Kandy Falcons - Eliminator

லங்கா பிரீமியர் லீக் (LPL T20) 2024ஆம் ஆண்டு தொடரில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் மற்றும் கண்டி பல்கோன்ஸ் இடையிலான எலிமினேட்டர் மோதலில், கண்டி பல்கோன்ஸ் 2 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.  

>>இலங்கை வரும் இந்திய T20I மற்றும் ஒருநாள் குழாம்கள் அறிவிப்பு<<

LPL T20 தொடரின் எலிமினேட்டர் மோதலான இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச அரங்கில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கண்டி வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர் 

இதன்படி முதலில் துடுப்பாடிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்கள் பெற்றது. 

கொழும்பு துடுப்பாட்டத்தில் தனியாளாக போராடிய சதீர சமரவிக்ரம 45 பந்துகளில் 7 பெளண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் பெற்றார். 

கண்டி பல்கோன்ஸ் பந்துவீச்சில் மொஹமட் ஹஸ்னைன் 3 விக்கெட்டுக்களையும், அணித்தலைவர் வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 160 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய கண்டி பல்கோன்ஸ் அணி தொடக்கம் முதல் தடுமாறி ஒரு கட்டத்தில் 83 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது. இந்த தருணத்தில் அவ்வணிக்காக பொறுப்புடன் ஆடிய கமிந்து மெண்டிஸ் மற்றும் தசுன் ஷானக்க ஆகியோரது ஆட்டம் கை கொடுக்க கண்டி பல்கோன்ஸ் போட்டியின் வெற்றி இலக்கை 18.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களுடன் அடைந்தது. 

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் வெறும் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் தசுன் ஷானக்க 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பெளண்டரிகளோடு 39 ஓட்டங்கள் குவித்தார். 

கொழும்பு அணியின் பந்துவீச்சில் மதீஷ பதிரன மற்றும் பினுர பெர்ணான்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை கமிந்து மெண்டிஸ் பெற்றார். 

இதேநேரம் இப்போட்டியில் வெற்றியடைந்த கண்டி பல்கோன்ஸ் LPL தொடரின் முதல் குவாலிபையர் போட்டிக்கு தெரிவாக, கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் தொடரில் இருந்து வெளியேறுகின்றது. 

போட்டியின் சுருக்கம்  

Result


Colombo Strikers
159/8 (20)

Kandy Falcons
163/8 (18.4)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c & b Wanindu Hasaranga 30 29 2 1 103.45
Muhammad Waseem c Mohammad Haris b Angelo Mathews 10 9 2 0 111.11
Glenn Phillips run out (Dinesh Chandimal) 0 1 0 0 0.00
Nipun Dhananjaya c Ramesh Mendis b Mohammad Hasnain 14 11 2 0 127.27
Sadeera Samarawickrama c Andre Fletcher b Mohammad Hasnain 62 45 7 0 137.78
Shadab Khan b Wanindu Hasaranga 0 1 0 0 0.00
Dunith Wellalage c Dinesh Chandimal b Dasun Shanaka 28 21 3 1 133.33
Thisara Perera not out 0 1 0 0 0.00
Isitha Wijesundara c Mohammad Haris b Mohammad Hasnain 0 1 0 0 0.00
Binura Fernando not out 0 1 0 0 0.00


Extras 15 (b 2 , lb 3 , nb 0, w 10, pen 0)
Total 159/8 (20 Overs, RR: 7.95)
Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 13 1 6.50
Dasun Shanaka 4 0 33 1 8.25
Chaturanga de Silva 4 0 32 0 8.00
Mohammad Hasnain 3 0 24 3 8.00
Wanindu Hasaranga 4 0 21 2 5.25
Ramesh Mendis 3 0 31 0 10.33


Batsmen R B 4s 6s SR
Dinesh Chandimal c Sadeera Samarawickrama b Binura Fernando 6 4 0 1 150.00
Andre Fletcher c Shadab Khan b Isitha Wijesundara 20 12 3 1 166.67
Mohammad Haris c Isitha Wijesundara b Binura Fernando 10 4 1 1 250.00
Kamindu Mendis b Matheesha Pathirana 54 36 3 3 150.00
Angelo Mathews c Rahmanullah Gurbaz b Matheesha Pathirana 10 15 1 0 66.67
Wanindu Hasaranga c Muhammad Waseem b Shadab Khan 1 3 0 0 33.33
Chaturanga de Silva c Shadab Khan b Matheesha Pathirana 9 8 1 0 112.50
Dasun Shanaka b Binura Fernando 39 21 4 2 185.71
Ramesh Mendis not out 5 4 1 0 125.00
Chamath Gomez not out 2 5 0 0 40.00


Extras 7 (b 0 , lb 3 , nb 0, w 4, pen 0)
Total 163/8 (18.4 Overs, RR: 8.73)
Bowling O M R W Econ
Binura Fernando 4 0 35 3 8.75
Isitha Wijesundara 3 0 20 1 6.67
Thisara Perera 1 0 10 0 10.00
Shadab Khan 4 0 33 1 8.25
Matheesha Pathirana 4 0 38 3 9.50
Glenn Phillips 1 0 9 0 9.00
Dunith Wellalage 1.4 0 15 0 10.71




 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<