இலங்கை – நியூசிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

Sri Lanka tour of New Zealand 2024/25

4
Sri Lanka tour of New Zealand 2024

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு நியூசிலாந்து அணி  இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை. 

>> இறுதி லீக் மோதலில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் வெற்றி

எனினும் அதனை தொடர்ந்து இலங்கை அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகளுக்காக நியூசிலாந்து சென்று விளையாடவுள்ளது. இந்த நிலையில் குறித்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி டிசம்பர் 28ம் திகதி T20I தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், ஒருநாள் தொடர் ஜனவரி 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. T20I போட்டிகள் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 02ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. முதல் இரண்டு போட்டிகள் டௌரங்காவில் நடைபெறவுள்ளதுடன், மூன்றாவது போட்டி நெல்சனில் நடைபெறவுள்ளது. 

அதனை தொடர்ந்து ஜனவரி 05ம் திகதி ஒருநாள் தொடர் வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளதுடன், அடுத்த இரண்டு போட்டிகளும் ஜனவரி  8 மற்றும் 11ம் திகதிகளில் முறையே ஹெமில்டன் மற்றும் ஆக்லேண்ட்டில் நடைபெறவுள்ளன. 

போட்டி அட்டவணை 

  • முதல் T20I போட்டிடிசம்பர் 28 (டொளரங்கா) 
  • 2வது T20I போட்டிடிசம்பர் 30 (டௌரங்கா) 
  • 3வது T20I போட்டிஜனவரி 02 (நெல்சன்) 
  • முதல் ஒருநாள் போட்டிஜனவரி 05 (வெலிங்டன்) 
  • 2வது ஒருநாள் போட்டிஜனவரி 08 (ஹெமில்டன்) 
  • 3வது ஒருநாள் போட்டிஜனவரி 11 (ஆக்லேண்ட்)

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<