ஆட்டநயாகன் விருதுக்கான தொகையை நன்கொடையாக வழங்கிய தீக்ஷன

127
Lanka Premier League 2024

கோல் மார்வல்ஸ் அணியின் வீரர் மஹீஷ் தீக்ஷன தம்புள்ள சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதுக்கான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் பின்னர் ஆட்டநாயகன் விருதுக்காக வழங்கப்பட்ட 1500 அமெரிக்க டொலர்களை (4.5 இலட்சம் ரூபா) இந்திரா புற்றுநோய் அறக்கட்டளைக்கு மஹீஷ் தீக்ஷன நன்கொடையாக அளித்துள்ளார்.

>>ஹஸரங்க, துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் பல்கோன்ஸ் அபார வெற்றி!

தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கோல் மார்வல்ஸ் அணிக்கு எதிரான போட்டியைில் இளஞ்சிவப்பு நிற ஜேர்சியுடன் களமிறங்குவதாக அறிவித்திருந்தது.

இதனையடுத்து கோல் மார்வல்ஸ் அணியும் குறித்த இந்த விழிப்புணர்வுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்ததுடன், அவர்களுடைய ஜேர்சியிலும் இளஞ்சிவப்பு நிறம் உள்வாங்கப்பட்டது. அதுமாத்திரமின்றி இலங்கை கிரிக்கெட் சபையும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து குறித்த நாளை  இளஞ்சிவப்பு நாளாக (Pink DAY) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<