இறுதி நிமிடங்களில் வெற்றியை சுவீகரித்த அர்ஜென்டினா

12
Copa America 2024

கோபா அமெரிக்கா கிண்ணத்தொடரில், அர்ஜென்டினா கொலம்பியாவை மேலதிக நேரத்தில் 1க்கு 0 என வீழ்த்தி 16வது கோபா அமெரிக்காவை வென்றது.

மியாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த இறுதிப்போட்டி 80 நிமிடங்கள் தாமதமாகி ஆரம்பிக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியில் ஜியோவானி லோ செல்சோவின் பந்து பரிமாற்றத்தில் லாட்டாரோ மார்டினெஸ் கோலை அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார்.

கேப்டன் லியோனல் மெஸ்ஸி பந்தைத் துரத்தும்போது தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதால், இரண்டாவது பாதியின் நடுவே அவரை மாற்ற வேண்டியிருந்தபோது கண்ணீர் விட்டு மைதனைத்தை விட்டு வெளியேறினார்.

இந்த போட்டியின் ஆரம்பத்தில், டிக்கெட் இல்லாத ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயற்சித்ததால், அங்கு கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.ரசிகர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பலரை கைது செய்ததுடன் மோதலும் அங்கு வெடித்தது. பல ஆதரவாளர்களுக்கு துணை மருத்துவர்களிடமிருந்து சிகிச்சை தேவைப்பட்டது.

அதற்கு மேல், ஆடுகளத்தில் கொலம்பிய பாப்ஸ்டார் ஷகிராவின் இசை நிகழ்ச்சியின் காரணமாக அரை நேர இடைவேளை 25 நிமிடங்கள் நீடித்தது. இது பலரை அசௌகரியப்படுத்தியது.

அர்ஜென்டினா  அணிக்கு 75ஆவது நிமிடத்தில் நிக்கோலஸ் டாக்லியாபிகோ கோலடித்தார். எனினும் அது ஒப் சைட் ஆக கூறி நிராகரிக்கப்பட்டது.

இந்த போட்டியில் 112ஆவது நிமிடத்தில் வெற்றி கோலை அடித்த மார்டினெஸ், இந்த தொடரின் அதிக கோலடித்த வீரருக்கு வழங்கும் தங்க பாதணி விருதையும் இந்த தொடரில் மொத்தமாக ஐந்து கோல்கள் அடித்து வென்றார்.