18 வயதின் கீழ் கூடைப்பந்து அணிகள் இடையே நடைபெற்ற சர்வதேச கூடைப்பந்து சம்மேளன (FIBA) ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் மாலைதீவு மற்றும் இலங்கை ஆகியவை மோதிய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
>> இந்தியாவிடம் வீழ்ந்த இலங்கை 18 வயதின் கீழ் கூடைப்பந்து அணி
FIBA ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் இலங்கை – இந்திய ஆகியவை மோதிய போட்டி தொடரின் மூன்றாம் நாளான நேற்று (12) இடம்பெற்றது.
கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் விறுவிறுப்பாக ஆரம்பித்த இலங்கை – மாலைதீவுகள் இடையிலான மோதலில் முதல் கால்பகுதியினை இலங்கை 30-20 எனக் கைப்பற்றியது. பின்னர் இரண்டாவது கால்பகுதியில் மேலதிகமாக 26 புள்ளிகளை இலங்கை பெற, 56-46 என்கிற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை போட்டியின் முதல் அரைப்பகுதியில் முன்னிலை அடைந்தது.
பின்னர் போட்டியின் மூன்றாம் நான்காம் கால்பகுதிகளிலும் ஆதிக்கம் காண்பித்த இலங்கை, போட்டியின் நிறைவில் 102-76 என்கிற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியினைப் பதிவு செய்தது.
அத்துடன் இந்த வெற்றியோடு 18 வயதின் கீழ் கூடைப்பந்து அணிகள் இடையிலான சர்வதேச கூடைப்பந்து சம்மேளன (FIBA) ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் இறுதிப் போட்டியில் ஆடவும் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இறுதிப் போட்டியில் இலங்கை இந்தியாவை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<