இந்தியாவிடம் வீழ்ந்த இலங்கை 18 வயதின் கீழ் கூடைப்பந்து அணி

36
Sri Lanka Falters in Opening Clash at FIBA U18 Asia Cup

18 வயதின் கீழ் கூடைப்பந்து அணிகள் இடையே நடைபெற்ற சர்வதேச கூடைப்பந்து சம்மேளன (FIBA) ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை மோதிய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.  

>>2023 இலங்கையின் விளையாட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்திய பெண்கள்<<

FIBA ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் இலங்கைஇந்திய ஆகியவை மோதிய போட்டி தொடரின் இரண்டாவது மோதலாக அமைந்திருந்தது. தொடரின் முதல் போட்டியில் மாலைதீவுகள் 66-55 என பங்களாதேஷை வீழ்த்தியிருந்தது 

தொடர்ந்து கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் ஆரம்பித்த இலங்கைஇந்திய மோதலில் முதல் கால்பகுதியினை இந்தியா 21-9 எனக் கைப்பற்றியது. பின்னர் இரண்டாவது கால்பகுதியினையும் தமதாக்கிய இந்தியா போட்டியின் முதல் அரைப்பகுதியினை 40-22 என்கிற புள்ளிகள் அடிப்படையில் தமதாக்கியது 

பின்னர் போட்டியின் மூன்றாம் கால்பகுதியினையும் 61-39 எனக் கைப்பற்றிய இந்தியா, போட்டியின் இறுதிக் கால்பகுதியினையும் தமதாக்கி போட்டி முழுவதும் தமது முழு ஆதிக்கத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தினை 88-44 என்கிற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<