பிரபாத்தின் பந்துவீச்சில் கோல் மார்வல்ஸ் அணி அதிரடி வெற்றி

32

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2024ஆம் ஆண்டு தொடரில் நேற்று (10) கோல் மார்வல்ஸ் மற்றும் கண்டி பல்கோன்ஸ் அணிகள் மோதிய போட்டியில்  கோல் மார்வல்ஸ் 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.  

ரெய்லி ரூஷோவின் 44 பந்துகள் சதத்துடன் ஜப்னாவுக்கு அபார வெற்றி

கண்டி பல்கோன்ஸ், கோல் மார்வல்ஸ் அணிகள் இடையிலான போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. தொடரின் 14ஆவது லீக் மோதலான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கோல் மார்வல்ஸ் வீரர்கள் முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தனர் 

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி பல்கோன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்கள் எடுத்தது. கண்டி பல்கோன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப வீரராக வந்த அன்ட்ரே பிளச்சர் 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகளோடு 69 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் தினேஷ் சந்திமால் 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்கள் பெற்றார் 

கோல் மார்வல்ஸ் அணியின் பந்துவீச்சில் அசத்தலாக செயற்பட்ட சுழல் வீரரான பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற ட்வெய்ன் பிரோட்டோரியஸ் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார் 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 188 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கோல் மார்வல்ஸ் அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து அடைந்தது.   

தேர்வாளர்களை பதவியில் இருந்து நீக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட்

கோல் மார்வல்ஸ் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த அலெக்ஸ் ஹேல்ஸ் 55 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகளோடு ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்கள் எடுக்க, பானுக்க ராஜபக்ஷ 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளோடு 46 ஓட்டங்கள் பெற்றார் 

கண்டி பல்கோன்ஸ் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க மற்றும் அன்ட்ரே பிளச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சினால் பிரயோசனம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை 

ஸ்கோர் விபரம் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<