தேர்வாளர்களை பதவியில் இருந்து நீக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட்

38

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களாக செயற்பட்டு வந்த வஹாப் ரியாஸ் மற்றும் அப்துல் ரஷாக் ஆகியோர் குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மகளிர் CPL தொடரில் விளையாடவுள்ள சமரி அதபத்து!

பாகிஸ்தான் 2024ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகாமல் முதல் சுற்றிலேயே வெளியேறியது. அத்துடன் கத்துக்குட்டி கிரிக்கெட் அணியான ஐக்கிய அமெரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இந்த விடயங்களின் எதிரொலியாகவே தேர்வாளர்களின் நீக்கம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதில் அப்துல் ரஷாக் கடந்த வாரமே பாகிஸ்தானின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் தேர்வாளர்கள் குழாத்தில் அடக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது மகளிர் அணியின் தேர்வாளராக செயற்படவில்லை என குறிப்பிடப்பட்டிருக்கின்றது 

அதேவேளை தேர்வாளர்கள் நீக்கப்பட்ட விடயம் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மிக விரைவில் ஊடக அறிக்கை ஒன்றிணை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது 

ஏற்கனவே சிரேஷ்ட தேர்வாளர் பதவி பெற்றிருந்த வஹாப் ரியாஸ் குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, 7 பேர் கொண்ட பாகிஸ்தான் தெரிவுக் குழாத்தில் இணைக்கப்பட்டதன் பின்னரே அவரினை அந்த நாட்டு கிரிக்கெட் சபை T20 உலகக் கிண்ண தோல்விகளுக்காக நீக்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

இலங்கை இளையோர் அணிக்காக அரைச்சதம் விளாசிய தினுர கலுப்பான

அதேநேரம் வஹாப் ரியாஸ் பதவி விலக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழுவில் தற்போது 5 பேர் காணப்படுவதோடு அதில் தலைமைப் பயிற்சியாளர், அணித்தலைவர் (ஒவ்வொரு வகை போட்டிகளுக்குமான) தவிர முக்கிய உறுப்பினர்களாக மொஹமட் யூசுப், அசாட் சபீக் ஆகியவர்கள் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<