லங்கா பிரீமியர் லீக் (LPL) 2024ஆம் ஆண்டு தொடரில் நேற்று (09) கோல் மார்வல்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் சமிந்து விக்ரமசிங்கவின் அதிரடி சகலதுறை ஆட்டத்தோடு 25 ஓட்டங்களால் அசத்தல் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
மேலும் இந்த வெற்றியுடன் LPL T20 தொடரில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியானது மூன்று தொடர் தோல்விகளின் பின்னர் அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றது.
>>LPL தொடரின் அதிகூடிய வெற்றியிலக்கை எட்டி கண்டி பல்கோன்ஸ் சாதனை<<
தம்புள்ளை சிக்ஸர்ஸ், கோல் மார்வல்ஸ் அணிகள் இடையிலான போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. தொடரின் 12ஆவது லீக் மோதலான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கோல் மார்வல்ஸ் வீரர்கள் முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தனர்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும் சமிந்து விக்ரமசிங்கவின் பொறுப்பான ஆட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்தது.
தம்புள்ளை துடுப்பாட்டம் சார்பில் பின்வரிசையில் களம் வந்த சமிந்து விக்ரமசிங்க 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகளோடு 56 ஓட்டங்கள் பெற்றார். கோல் மார்வல்ஸ் பந்துவீச்சில் கவீந்து நதீஷான் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, இசுரு உதான 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 161 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கோல் மார்வல்ஸ் தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதிலும் அதற்காக இசுரு உதான போராட்டம் காட்டினார். பின்னர் அவரது போராட்டம் வீணாக கோல் மார்வல்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 19.4 ஓவர்களில் 134 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
கோல் மார்வல்ஸ் துடுப்பாட்டம் சார்பில் இசுரு உதான 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்கள் எடுத்திருந்தார். தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 3 விக்கெட்டுக்களையும், ஏற்கனவே துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சமிந்து விக்ரமசிங்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Reeza Hendricks | c Tim Seifert b Isuru Udana | 16 | 13 | 2 | 0 | 123.08 |
Kusal Perera | c Tim Seifert b Isuru Udana | 17 | 12 | 3 | 0 | 141.67 |
Lahiru Udara | c Sahan Arachchige b Kavindu Nadeeshan | 26 | 17 | 3 | 1 | 152.94 |
Nuwanidu Fernando | c Niroshan Dickwella b Dwaine Pretorius | 12 | 14 | 1 | 0 | 85.71 |
Mark Chapman | c Sahan Arachchige b Kavindu Nadeeshan | 12 | 11 | 1 | 0 | 109.09 |
Chamindu Wickramasinghe | not out | 56 | 34 | 6 | 3 | 164.71 |
Mohammad Nabi | st Niroshan Dickwella b Kavindu Nadeeshan | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Dushan Hemantha | b Maheesh Theekshana | 15 | 13 | 0 | 1 | 115.38 |
Dilshan Madushanka | c Tim Seifert b Zahoor Khan | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Nuwan Thushara | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0) |
Total | 160/8 (20 Overs, RR: 8) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dwaine Pretorius | 4 | 0 | 29 | 1 | 7.25 | |
Isuru Udana | 3 | 0 | 16 | 2 | 5.33 | |
Maheesh Theekshana | 4 | 0 | 27 | 1 | 6.75 | |
Zahoor Khan | 4 | 0 | 52 | 1 | 13.00 | |
Kavindu Nadeeshan | 4 | 0 | 16 | 3 | 4.00 | |
Janith Liyanage | 1 | 0 | 18 | 0 | 18.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | b Nuwan Thushara | 7 | 3 | 0 | 1 | 233.33 |
Alex Hales | c & b Dushan Hemantha | 17 | 20 | 2 | 1 | 85.00 |
Tim Seifert | lbw b Nuwan Thushara | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Bhanuka Rajapaksa | b Nuwan Thushara | 7 | 9 | 1 | 0 | 77.78 |
Janith Liyanage | lbw b Dilshan Madushanka | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Sahan Arachchige | c Lahiru Udara b Dushan Hemantha | 11 | 20 | 0 | 0 | 55.00 |
Dwaine Pretorius | b Dushan Hemantha | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Isuru Udana | c Mohammad Nabi b Chamindu Wickramasinghe | 72 | 38 | 5 | 5 | 189.47 |
Kavindu Nadeeshan | c Reeza Hendricks b Nuwan Pradeep | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Maheesh Theekshana | not out | 5 | 11 | 0 | 0 | 45.45 |
Zahoor Khan | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 9 (b 4 , lb 1 , nb 0, w 4, pen 0) |
Total | 135/9 (19.4 Overs, RR: 6.86) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nuwan Thushara | 4 | 0 | 37 | 3 | 9.25 | |
Dilshan Madushanka | 4 | 0 | 16 | 1 | 4.00 | |
Mohammad Nabi | 3 | 1 | 11 | 0 | 3.67 | |
Dushan Hemantha | 4 | 0 | 33 | 3 | 8.25 | |
Nuwan Pradeep | 4 | 0 | 32 | 1 | 8.00 | |
Chamindu Wickramasinghe | 0.4 | 0 | 1 | 2 | 2.50 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<